Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Huawei Video செயலியில் மீடியாகார்ப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்

மீடியாகார்ப் நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் சிலவற்றை ரசிகர்கள் இனி Huawei Video செயலியில் கண்டு ரசிக்கலாம். 

வாசிப்புநேரம் -
Huawei Video செயலியில் மீடியாகார்ப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்

படம்: Huawei Video

மீடியாகார்ப் நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் சிலவற்றை ரசிகர்கள் இனி Huawei Video செயலியில் கண்டு ரசிக்கலாம்.

அதன் மூலம் பிரிட்டன், மெக்சிகோ, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவற்றிலிருக்கும் ரசிகர்கள் 1,500 மணி நேரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். நாடகத் தொடர்கள், வாழ்வியல் நிகழ்ச்சிகள் போன்றவற்றை ரசிகர்கள் காணலாம்.

Huawei நிறுவனத்துடன் மீடியாகார்ப் செய்துகொண்ட ஒப்பந்தம் மூலம் வெளிநாட்டு ரசிகர்கள் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் தயாரிக்கப்பட்ட மீடியாகார்ப் நிகழ்ச்சிகளை காணலாம்.

சீனத் தலைநிலத்திற்கு வெளியே உள்ள 26 இடங்களில் Huawei Video செயலி மூலம் அவற்றைப் பார்க்க முடியும்.

Ming dynasty நாடகத் தொடரின் முதல் 5 பாகங்கள் அந்த ரசிகர்களுக்கு இலவசமாக Huawei Video செயலியில் வழங்கப்படும்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்