Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீரிழிவைக் கையாள செயலிகளைச் சார்ந்திருக்கவேண்டாம்: ஆய்வாளர்கள்

நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கான செயலிகளில் பெரும்பாலானவை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்வகிப்பது தொடர்பில் பொருத்தமான ஆலோசனைகளை வழங்குவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வாசிப்புநேரம் -
நீரிழிவைக் கையாள செயலிகளைச் சார்ந்திருக்கவேண்டாம்: ஆய்வாளர்கள்

படம்: Reuters/Muhammad Hamed

நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கான செயலிகளில் பெரும்பாலானவை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்வகிப்பது தொடர்பில் பொருத்தமான ஆலோசனைகளை வழங்குவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது புழக்கத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான திறன்பேசிச் செயலிகள், நீரிழிவை எளிதில் கையாள உதவுவதாக உறுதியளிக்கின்றன.

ஆனால் அவற்றில் வெகு சில மட்டுமே, பயன்படுத்துபவரின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆபத்தான விகிதத்தில் கூடினாலோ, குறைந்தாலோ அதற்கேற்ற வழிகாட்டிக் குறிப்புகளை வழங்குவதாக அண்மை அமெரிக்க ஆய்வு கூறுகிறது.

சுமார் 5,200 செயலிகள் குறித்து ஆய்வு இடம்பெற்றது.

அவற்றில் 371 மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் நீரிழிவு நிர்வாகக் குறிப்புகளைக் கொண்டிருப்பது தெரியவந்தது.

ஆய்வு முடிவுகள் :

* சம்பந்தப்பட்ட எல்லாச் செயலிகளுமே, பயனீட்டாளர் இரத்த சர்க்கரை அளவைப் பதிவுசெய்ய அனுமதிக்கின்றன.

* 37 விழுக்காட்டுச் செயலிகளில் மட்டுமே அதன் தொடர்பில் இலக்குகளை நிர்ணயிக்க முடிகிறது.

* 28 விழுக்காட்டுச் செயலிகள் மட்டும்தான் இரத்த சர்க்கரை அளவைப் பதிவுசெய்வதற்கான நினைவூட்டுச் சேவையைக் கொண்டிருக்கின்றன.

* இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அபாய விகிதத்தில் கூடினாலோ, குறைந்தாலோ, 58 விழுக்காட்டுச் செயலிகள் எச்சரிக்கை செய்கின்றன.

* 21 விழுக்காட்டுச் செயலிகள் குறைவான சர்க்கரை அளவைச் சமாளிக்கக் குறிப்புகள் வழங்குகின்றன.

* 15 விழுக்காட்டுச் செயலிகள் அதிக சர்க்கரை அளவின் தொடர்பில் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டிக் குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன.

செயலிகளில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், ஆய்வு அதனைப்  பிரதிபலிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நீரிழிவால் பாதிக்கப்பட்டோர் செயலிகளைச் சார்ந்திருக்காமல்,  விழிப்புணர்வுடன் செயல்படுவதே சிறந்தது என்று ஆய்வாளர்கள் ஆலோசனை கூறினர்.

சிங்கப்பூரர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தும் நீண்டகால நோய்கள் பட்டியலில் நீரிழிவு இரண்டாவது இடத்தில் உள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்