Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்வதால் பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு நன்மையா?

உடற்பயிற்சியில் ஈடுபடும் கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள் பிற சிசுக்களோடு ஒப்பிடுகையில் முன்கூட்டியே அங்கங்களை அசைக்கத் தொடங்குவதாக ஆய்வொன்று கூறுகிறது. 

வாசிப்புநேரம் -

உடற்பயிற்சியில் ஈடுபடும் கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள் பிற சிசுக்களோடு ஒப்பிடுகையில் முன்கூட்டியே அங்கங்களை அசைக்கத் தொடங்குவதாக ஆய்வொன்று கூறுகிறது.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் தாய்மாருக்கு மட்டுமின்றி கருவில் உள்ள குழுந்தைகளுக்கும் வலிமை அதிகரிக்கும் என்ற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஈஸ்ட் கரோலினா பல்கலைக்கழகத் துணை பேராசிரியர் லிண்டா மே அது குறித்து ஆய்வுசெய்துள்ளார்.

உடற்பயிற்சியில் ஈடுபட்ட கர்ப்பிணிகளையும் ஈடுபடாதோரையும் அவர் கண்காணித்தார்.

பேறுகாலத்தில் உடற்பயிற்சி செய்த பெண்களுடைய பிள்ளைகளின் இதயம் உறுதியாய் இருந்ததாகத் தெரியவந்தது.

பிறந்த குழந்தையின் அங்க அசைவுகளின் தொடர்பிலும் ஆய்வு மேற்கொண்டார் மே.

70க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான கர்ப்பிணிகள் ஆய்வில் பங்கெடுத்தனர்.

அவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

ஒரு குழு 50 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபட்டது. மெதுவோட்டம், வேகநடை, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சியில் பிற குழுவைச் சேர்ந்த கர்ப்பிணிகள் ஈடுபட்டனர்.

இன்னொரு குழுவினர் எப்போதும் போலவே செயல்பட்டுவந்தனர்.

ஆய்வில் பங்கெடுத்த அனைத்துப் பெண்களும் ஆரோக்கியமான பிள்ளைகளை ஈன்றெடுத்தனர்.

எனினும் உடற்பயிற்சி செய்த தாய்மாரின் பிள்ளைகள் அனைத்தும் அங்க அசைவுச் சோதனைகளில் சிறப்பாகச் செய்தனர்.

இதன் தொடர்பில் சக ஊழியர்களோடு சேர்ந்து மேலும் ஆய்வுகளில் ஈடுபடவிருப்பதாகத் துணை பேராசிரியர் மே கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்