Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வாய் சுத்திகரிப்பான் - துர்நாற்றத்தைப் போக்குமா? மோசமாக்குமா?

வாய் துர்நாற்றத்தைப் போக்குவதற்குப் பலரும் mouth fresheners என்கிற வாய் சுத்திகரிப்பானை நாடலாம்.

வாசிப்புநேரம் -
வாய் சுத்திகரிப்பான் - துர்நாற்றத்தைப் போக்குமா? மோசமாக்குமா?

(படம்: Mudassar Iqbal/Pixabay)

வாய் துர்நாற்றத்தைப் போக்குவதற்குப் பலரும் mouth fresheners என்கிற வாய் சுத்திகரிப்பானை நாடலாம்.

இன்னும் சிலர் வெகுநேரம் முகக்கவசம் அணிவதால் வாயில் ஏற்படக்கூடிய sour breath அல்லது ‘mask mouth’ என்கிற நாற்றத்தை நீக்குவதற்காக வாய் சுத்திகரிப்பானைப் பயன்படுத்துகின்றனர்.

அது துர்நாற்றமல்ல. அதன் மருத்துவ பெயர் halitosis.

முகக்கவசம் அணிந்திருக்கும்போது, நீண்ட நேரத்திற்கு வாய் மூடியே இருப்பதாலும், குறைவான அளவு தண்ணீர் குடிப்பதாலும் அது ஏற்படுகிறது.

Halitosis நீடித்தால், வாய் சுகாதாரம் பாதிக்கப்படலாம் என்கிறார் டாக்டர் சினேகா சுந்தர் ராஜன் (Sneha Sundar Rajan).

ஆனால் அதைப் போக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் வாய் சுத்திகரிப்பான் ஸ்ப்ரேக்களில் பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர் கூறினார்.

நுண்ணுயிர் வளர்ச்சி அதிகரிப்பு

பெரும்பாலான வாய் சுத்திகரிப்பான்கள், துர்நாற்றத்தைப் போக்கவே முயற்சி செய்கின்றன.

அவை துர்நாற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை நிறுத்துவதில்லை.

மேலும் கடைகளில் விற்கப்படும் பல வாய் சுத்திகரிப்பான்களில் இனிப்பு உள்ளது.

அது நுண்ணுயிர் வளர்ச்சியை அதிகரித்து துர்நாற்றத்தை மோசமாக்கலாம்.

உலர்ந்த வாய் (Dry mouth)

பெரும்பாலான வாய் சுத்திகரிப்பான்களில் ஆல்கஹால் (alcohol) உள்ளது.

அது வாய் உலர்ந்துபோகச் செய்து, நுண்ணுயிர் வளர்ச்சி ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பற்சொத்தை (Tooth decay)

வாய் சுத்திகரிப்பான்களில் உள்ள ஆல்கஹாலும் இனிப்பும் அமில உற்பத்தியை அதிகரிக்கின்றது.

அமிலம் அதிகமுள்ள சூழலில் நுண்ணுயிர் வளரும் என்பதால் பற்சொத்தை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க என்ன செய்யலாம்?

  • இனிப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் xylitol உள்ள வாய் சுத்திகரிப்பான்கள் பாதுகாப்பானவை. அவை பற்சொத்தை ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கின்றன.
  • பெருஞ்சீரக விதைகள், ஏலக்காய், கிராம்பு, புதினா இலைகள் ஆகிய இயற்கையான வாய் சுத்திகரிப்பான்களை நாடலாம்.
  • மருத்துவ ஆலோசனை பெறலாம்.

-TODAY

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்