Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனித உடலில் புதிய உறுப்பு- ஆய்வாளர்கள்

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

வாசிப்புநேரம் -
மனித உடலில் புதிய உறுப்பு- ஆய்வாளர்கள்

(படம்: Singapore Science Centre)

அமெரிக்க ஆய்வாளர்கள் மனித உடலில் புதிய உறுப்பு ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாய்க் கூறியுள்ளனர்.

மனித உடலின் ஆகப் பெரியதாக இருக்கும் அந்த உறுப்புக்கு, Interstitium எனப் பெயரிட்டுள்ளனர்.

நம் உடலெங்கும் உள்ள திசுக்களின் உள்ளே அமைந்துள்ள திரவம் நிரம்பிய பகுதியின் கட்டமைப்பு Interstitium.

புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்த அண்மைக் கண்டுபிடிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நியூயார்க் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் அந்த ஆய்வை வழிநடத்தினர்.

தோலுக்குக் கீழ், மற்ற உறுப்புகளுக்கு இடையில் புதிய உறுப்பைக் காணலாம்.

இரத்த நாளங்கள், தசைகள், செரிமானக் குழாய், சிறுநீர்க் குழாய் என அனைத்தையும் சுற்றி அமைந்துள்ள அந்தப் புதிய உறுப்பு சுமார் 10 லிட்டர் திரவத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்ப்பட்டது.

அசையும் தன்மையுடைய உள்-உறுப்புகளை அதிர்வுகளில் இருந்து காப்பது அதன் முக்கியச் செயல்பாடு.

அது கண்டுபிடிக்கப்பட்டது ஒரு தற்செயலான செயல் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்