Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புத்தாண்டுத் தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது?

ஆண்டுக்கு ஆண்டு, நம்மில் பலர் புத்தாண்டுத் தீர்மானங்கள் பலவற்றைப் பற்றி யோசித்திருப்போம்.

வாசிப்புநேரம் -
புத்தாண்டுத் தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது?

(படம்: Pixabay)


ஆண்டுக்கு ஆண்டு, நம்மில் பலர் புத்தாண்டுத் தீர்மானங்கள் பலவற்றைப் பற்றி யோசித்திருப்போம்.

ஆனால், அந்தத் தீர்மானங்கள் முதல் ஓரிரண்டு மாதங்களோடு நிறைவேறாமல் போவதுண்டு. 'புத்தாண்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' என்ற ஒரு தீர்மானத்தைக் கூட சிலர் வைத்திருப்பது உண்டு.

தீர்மானங்களை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது?என்ன செய்வது? சிலரிடம் கேட்டோம்.....

நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களைத் தேர்ந்தெடுப்பது

பொதுப்படையான தீர்மானங்களைத் தவிர்க்கவேண்டும். அடுத்த ஆண்டுக்குள், 'நான் பணக்காரராகவேண்டும்' என்று பொதுவாகத் தீர்மானிக்காமல், 'நான் 10,000 வெள்ளியைச் சேமிக்கவேண்டும்' என்ற சாதிக்கக்கூடிய தீர்மானத்தை முடிவு செய்யலாம்.

அடிப்படையைத் தீர்மானிப்பது

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்பதை நிர்ணயிக்க ஓர் அடிப்படையை உருவாக்கவேண்டும். உதாரணத்திற்கு, ஓராண்டுக்கு 12,000 வெள்ளி சேமிக்கவேண்டுமென்றால், ஒரு மாதத்திற்கு 1,000 வெள்ளி சேமிக்கும் தீர்மானத்தை வைத்துக்கொள்ளலாம்.

தீர்மானத்தைப் பழக்கமாகக் கொள்வது

வரும் ஆண்டில், கூடுதலாக ஒரு மணிநேரம் தூங்கவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டிருந்தால், அதை ஜனவரி முதலாம் தேதியிலிருந்தே கடைப்பிடிக்கவேண்டும். ஒரு பழக்கத்தை உருவாக்க 21 நாள்கள் எடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாள் ஒழுங்காகத் தூங்குவது மற்றொரு நாள் அளவுக்கு மீறி தூங்குவது என்று மாற்றி மாறிச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அது தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் செய்துவிடும்.

தீர்மானத் தடுக்கும் செயல்களைத் தவிர்ப்பது

தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கும் செயல் எது என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.

தூங்குவதற்கு முன், கைபேசி பயன்படுத்துவது அதில் ஒன்றாக இருந்தால், படுக்கைக்கு அருகே ஒரு புத்தகத்தை வைத்துக்கொள்ளுங்கள். கைபேசிக்குப் பதிலாக, புத்தகத்தைப் படிக்கலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்