Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

5 எளிய பயிற்சிகளில் புதிய ஆண்டை புத்துணர்வுடன் வரவேற்கலாம்!

அலுவலகத்தில் வேலைப் பளு. வீட்டில் பல அலுவல்கள். அனைத்தையும் சமாளிக்க வேண்டும். கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். புதிய ஆண்டைப் புத்துணர்வுடன் தொடங்க இதோ சில வழிகள்

வாசிப்புநேரம் -

அலுவலகத்தில் வேலைப் பளு. வீட்டில் பல அலுவல்கள்.

அனைத்தையும் சமாளிக்க வேண்டும். கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்.

புதிய ஆண்டைப் புத்துணர்வுடன் தொடங்க இதோ சில வழிகள்:

1. கவனம் செலுத்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது

உடற்பயிற்சியைத் தொடங்கும்போது உடனே இடைவிடாது செய்வது சிரமம். அதேபோல் தான் மனத்தை ஒருநிலைப்படுத்துவதும். சிறிது சிறிதாகத் தொடங்கவேண்டும்.

முதலில் 5 நிமிடங்கள் வேலையிலோ ஒரு புத்தகத்திலோ முழுக்கவனம் செலுத்துங்கள். பின் 2 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்யுங்கள்.

5 நிமிடம் 10 நிமிடமாகும். 10 நிமிடம் 15 நிமிடமாகும். 15 நிமிடம் 20 நிமிடமாகும். 9 நாளில் தொடர்ந்து 45 நிமிடங்கள் இடம்விடாது கவனம் செலுத்தும் ஆற்றல் ஏற்படும்.

2. தியானம் செய்வது

தியானம் செய்வது மனத்தை ஒருமுகப்படுத்த உதவும் என்பது பலருக்குத் தெரியும்.

ஒவ்வொரு நாளும் 10இலிருந்து 20 நிமிடங்கள் தியானம் செய்தால் போதும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதனால் காலை எழுந்தவுடன் 10 நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு மூச்சை இழுத்துவிடுவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

3. நல்ல காற்றைச் சுவாசிப்பது

வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களை அடைத்துக்கொள்ளாதீர்கள்.

மதிய உணவு வேளை, வெளியே நடந்துசென்று சாப்பிடுங்கள்.

பேருந்தில் செல்லும்போது ஒரு பேருந்து நிறுத்தம் முன்னதாகவே இறங்கி நடக்கலாம்.

மெதுநடையும் தெளிந்த காற்றின் சுவாசமும் மனவுளைச்சலைக் குறைக்கும். தெளிவான மனத்துடன் கவனம் செலுத்தலாம்.

4. உடற்பயிற்சி செய்வது

வாரத்திற்கு 3 முறையாவது 20இலிருந்து 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.

நீண்ட நேரம் சுலபமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையின் செயல்பாடு மேம்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

5. மனனம் செய்வது

மனனம் செய்வது மூளைக்குச் சிறந்த பயிற்சி.

ஒவ்வொரு வாரமும் ஒரு சிறு கவிதையை மனனம் செய்யலாம்.

மூளைக்கு வளர்ச்சி. அதேவேளை அழகிய கவிதைகளைக் கூறி நண்பர்களை அசத்தலாம்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்