Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

யார் அடுத்த ஜேம்ஸ் பாண்ட்?

சிங்கப்பூரில் "No Time to Die" என்ற புதிய ஜேம்ஸ் பாண்ட் (James Bond) படம், நாளை (செப்டம்பர் 30) திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -
யார் அடுத்த ஜேம்ஸ் பாண்ட்?

Reuters

சிங்கப்பூரில் "No Time to Die" என்ற புதிய ஜேம்ஸ் பாண்ட் (James Bond) படம், நாளை (செப்டம்பர் 30) திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

படத்தில் கதாநாயகனான டேனியல் கிரெய்க் (Daniel Craig) ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே கடைசிமுறை.

2006ஆம் ஆண்டிலிருந்து உலகப் புகழ்பெற்ற உளவாளி 007 கதாபாத்திரத்தை கிரேய்க் ஏற்று நடித்து வருகிறார்.

அவர் மொத்தம் 5 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, யார் அடுத்ததாக பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆடவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஜேம்ஸ் பாண்ட் தயாரிப்பாளர் பார்பரா புரொக்கோலி (Barbara Broccoli) பலமுறை கூறியிருக்கிறார்.

பாண்ட், கறுப்பினத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.

பெண்ணாக இருக்க வாய்ப்புகள் உண்டா?

ஆண் கதாபாத்திரத்தில் பெண்ணை நடிக்க வைப்பதில் விருப்பமில்லை என்று புரொக்கோலி தெரிவித்திருக்கிறார்.

"பெண்கள் அதைவிடச் சுவாரசியமானவர்கள்" என்று அவர் கூறினார்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்