Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

திரும்பிப் பார்ப்போமா: சின்ன சின்ன மாற்றம்.... பூமியைக் காக்கும்!

எதிர்வரும் புத்தாண்டிற்கு உங்களை மட்டும் மேம்படுத்திக்கொள்ள தீர்மானம் செய்யாமல் பூமியைக் காப்பாற்றவும் தீர்மானம் எடுக்கலாமே!

வாசிப்புநேரம் -
திரும்பிப் பார்ப்போமா: சின்ன சின்ன மாற்றம்.... பூமியைக் காக்கும்!

(படம்: Pixabay)

வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்று நம்மில் பலர் விரும்புவோம்.

அதற்காகப் புத்தாண்டில் தீர்மானமும் எடுப்போம்.

எதிர்வரும் புத்தாண்டிற்கு உங்களை மட்டும் மேம்படுத்திக்கொள்ள தீர்மானம் செய்யாமல் பூமியைக் காப்பாற்றவும் தீர்மானம் எடுக்கலாமே!

1. பிளாஸ்டிக் பைகளை விடுத்துத் துணிப்பைகளுக்கு மாறலாம்

(படம்: Pixabay)

பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி வீசுவதால் பிளாஸ்டிக் கழிவு ஏற்படுகிறது என்பது நமக்குத் தெரியும்.

அதற்குப் பதில், பொருள்கள் வாங்கச் செல்லும்போது வீட்டிலிருந்து துணிப் பைகளை எடுத்துச் செல்ல ஊக்குவிக்கப்படுகிறது.

Fairprice போன்ற சில கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

இதனால் துணிப்பைகளுக்கு மாறுவதன்வழி பூமியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் பணத்தையும் சேமிக்கலாம்.

2. புதிய ஆடைகள் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளலாம்

(படம்: Pixabay)

ஒவ்வொரு முறையும் புதிய ஆடைகளை உற்பத்தி செய்வதால் தொழிற்சாலைகளிலிருந்து கரியமில வாயு, கழிவு ஆகியவை வெளியாகின்றன.

அதோடு புது ஆடைகளை வாங்க, பழைய ஆடைகளை அடிக்கடி வீசும்போது கழிவு அதிகரிக்கிறது.

இதனைக் கட்டுப்படுத்த சில வழிகள்:

--ஆடைகள் பார்ப்பதற்குப் புதிதாக இருந்தால் அவற்றைத் தொடர்ந்து அணியலாம்.

--சில 'boutique' கடைகள் பார்ப்பதற்குப் புதிதாக இருக்கும் பழைய ஆடைகளை மலிவு விலையில் விற்கின்றன. அவற்றை வாங்கலாம்.

--பழைய புடவைகளின் ரவிக்கையை மட்டும் மாற்றி, நவீன உடை போல் அணிந்துகொள்ளலாம்.

3. பல முறை பயன்படுத்தக்கூடிய காப்பிக் குவளை, போத்தல்களுக்கு மாறலாம்

(படம்: Pixabay)

சிலருக்குத் தினமும் காப்பி அருந்தும் பழக்கமுண்டு.

கடையில் காப்பி வாங்கும்போது அதனை வாங்க சொந்தக் குவளையை எடுத்துச்செல்லலாம்.

பையில் எப்போதும் போத்தல் தண்ணீரை வைத்துக்கொள்ளும் பழக்கத்தைத் தொடங்கலாம்.

4. வீண் அஞ்சலுக்கு மறுப்புத் தெரிவிக்கலாம்

(படம்: Pixabay)

விளம்பரத் தாள்கள், சஞ்சிகைகள் என படித்துப் பார்க்கக்கூட நேரமில்லாமல் தினமும் பல அஞ்சலை வீசுகிறோம்.

ஆனால் அந்தத் தாள்கள் உருவாக மரங்கள் வெட்டப்பட்டுகின்றன என்பதை யோசித்திருப்போமா?

இதனால் தேவையற்ற அஞ்சலை அனுப்பும் நிறுவனங்களுக்கு அழைத்து விளம்பரங்களையும் சஞ்சிகைகளையும் அனுப்ப வேண்டாம் என்று கூறிவிடலாம்.

5. போக்குவரத்துக்கு சைக்கிளைப் பயன்படுத்தலாம்

(படம்: Pixabay)

சிங்கப்பூரின் சைக்கிள் பாதைக் கட்டமைப்பை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.

அருகிலுள்ள கடைகளுக்கோ, வேலைக்கோ செல்ல சைக்கிளைப் பயன்படுத்தலாம்.

இதன்வழி வாகனத்திலிருந்து வெளியேறும் கரியமில வாயுவைக் குறைக்கலாம்.

பூமிக்கும் நன்மை... உடலுக்கும் நல்ல பயிற்சி! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்