Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'உடற்பருமன்' உள்ளவரா நீங்கள்? எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்!

இன்னும் 5 ஆண்டுகளில் 15 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்களுக்கு உடற்பருமன் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது

வாசிப்புநேரம் -

இன்னும் 5 ஆண்டுகளில் 15 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்களுக்கு உடற்பருமன் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கை அதனைக் குறிப்பிட்டது.

ஆனால் நாம் உடற்பருமனாக இருக்கிறோமா இல்லையா என்பதை அறிவது எப்படி?

அதற்கு, Body Mass Index (BMI) முறையைப் பயன்படுத்தலாம்.

BMI= உடல் எடை (கிலோகிராம்) / உயரம்* உயரம் (மீட்டர்)

உதாரணம் 1:
72/1.63*1.63 = 27.1 - உடற்பருமன்

உதாரணம் 2:
56/1.58*1.58 = 22.4 - உடற்பருமன் இல்லை

BMI எனப்படும் அளவீடு, எடையை மட்டும் பார்க்காமல், எடைக்கும் உயரத்துக்கும் இருக்கும் தொடர்பைக் கணக்கிட்டு உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கண்டுபிடிக்கும்.

BMI அளவு:

18.5 முதல் 22.9 வரை - ஆரோக்கியமான நிலை

23 முதல் 27.4 வரை - ஆரோக்கியமற்ற நிலை (குறைந்த அபாயம்)

27.5க்கு மேல் இருந்தால்- ஆரோக்கியமற்ற நிலை (அதிக அபாயம்)

ஒருவருடைய BMI அளவு 23க்கு மேல் இருந்தால், அது அவர் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதைக் குறிக்கும்.

உடற்பருமனாக இருக்கிறீர்களா என்பதை அறிய இந்த இணையப்பக்கத்தில் உள்ள கணக்கிடும் முறையைப் பயன்படுத்தலாம்:

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்