Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நோய்வாய்ப்பட்ட மனைவியை வேலையிடத்துக்கு அழைத்துச் செல்லும் கணவர்

சீனாவின் செங்டூ நகரில் வசிக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் அன்றாடம் வேலைக்கு, நோயாளியான தமது மனைவியுடன் செல்கிறார்.  

வாசிப்புநேரம் -

சீனாவின் செங்டூ நகரில் வசிக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் அன்றாடம் வேலைக்கு, நோயாளியான தமது மனைவியுடன் செல்கிறார்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் அவரது மனைவிக்கு அன்றாடப் பராமரிப்புத் தேவைப்படுகிறது. பார்த்துக்கொள்ள எவரும் இல்லை. அதனால் வூ ஃபெங்சுவான் என்ற பெயர் கொண்ட அந்த 54 வயது காவல் அதிகாரி, ஒவ்வொருநாளும் தம் மனைவியை காவல்நிலையத்துக்குத் தம்முடன் அழைத்துச் செல்கிறார்.

திரு. வூவின் மனைவிக்கு 3 மாதங்களுக்கு முன்னர் நரம்பு மண்டலத்தில் தொற்றுநோய் ஏற்பட்டது. அதனால் அவர் பேசும் சக்தியை இழந்தார். மேலும் அவருக்குத் தொடர் பராமரிப்பு தேவைப்பட்டது.

பணம் கொடுத்து ஆள் அமர்த்தத் தயாராய் இருந்தார் திரு வூ.
ஆனால் சரியான நபர் கிடைக்கவில்லை.

வேலையில் அனுமதி கேட்டார். திரு. வூவுக்கு பதில் மற்றொருவரைப் பணியில் அமர்த்திப் பயிற்சி கொடுப்பது சிரமம் என்று நினைத்த அதிகாரிகள், அதற்கு ஒப்புக்கொண்டனர்.

திரு. வூ, மனைவி மீது கொண்டிருக்கும் பாசத்தைப் புகழும் இணையவாசிகள், அவரது படங்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

மனைவியின் நிலை மோசமானால்?

வேலையிலிருந்து ஓய்வு பெற்று முழுநேரமாக மனைவியைப் பார்த்துக்கொள்ளப்போவதாகச் சொல்கிறார் இந்தப் பாசமிகு கணவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்