Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

132 ஆண்டுகள் கடலில் மிதந்து வந்த கண்ணாடி போத்தல்

மேற்கு ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய கண்ணாடி போத்தல் ஒன்றில் உலகின் ஆகப் பழைமையான, அச்சிடப்பட்ட தகவல் குறிப்புச் சீட்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
132 ஆண்டுகள் கடலில் மிதந்து வந்த கண்ணாடி போத்தல்

படம்: AFP

மேற்கு ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய கண்ணாடி போத்தல் ஒன்றில் உலகின் ஆகப் பழைமையான, அச்சிடப்பட்ட தகவல் குறிப்புச் சீட்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது கடலில் வீசப்பட்டது 132 ஆண்டுகளுக்கு முன்!

தற்போது அது மேற்கு ஆஸ்திரேலிய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

டோன்யா இல்லமன் என்னும் பெண்மணி சென்ற ஜனவரி மாதம் மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரையில் இந்த போத்தலைக் கண்டெடுத்தார்.

மூடியில்லாமல் கிடைத்த போத்தலுக்குள் நனைந்துகிடந்த தகவல் குறிப்பை உலரவைத்து வாசித்துப் பார்த்த இல்லமன் அதனை, மேற்கு ஆஸ்திரேலிய அரும்பொருளகத்திற்குக் கொண்டு சென்றார்.

அச்சிடப்பட்டிருந்த தகவல் குறிப்பில் ஜூன் 12, 1886 என்று கையால் எழுதப்பட்டிருந்தது. கடலின் நீரோட்டத்தைப் பற்றிப் புரிந்துகொள்வதற்காக ஜெர்மானியக் கடற்படை ஆய்வு நிலையத்தால் அனுப்பப்பட்ட தகவல்தான் இது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மூடியோடு கரையொதுங்கிய போத்தல், நாளாவட்டத்தில் மூடியை இழந்து கடற்கரை மணலில் புதையுண்டு கிடந்ததாக நம்பப்படுகிறது.

போத்தலும், குறிப்பும் 2 ஆண்டுகளுக்கு மேற்கு ஆஸ்திரேலிய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.   


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்