Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வெளிநாட்டுப் பயணம் - கடப்பிதழ், பணப்பை போன்றவை காணவில்லை; என்ன செய்யலாம்?

வெளிநாட்டுப் பயணம் செல்லும்போது கடப்பிதழ், கைத்தொலைபேசி, பணப்பை போன்றவற்றைக் கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

வாசிப்புநேரம் -

வெளிநாட்டுப் பயணம் செல்லும்போது கடப்பிதழ், கைத்தொலைபேசி, பணப்பை போன்றவற்றைக் கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

ஆனால் எவ்வளவு கவனமாக இருந்தாலும் சில வேளைகளில் இவை காணாமற் போகக்கூடும்.

அப்போது என்ன செய்யலாம்?

1. கடப்பிதழைக் காணவில்லை

உடனே அந்நாட்டுக் காவல்துறையிடம் புகார் செய்யவேண்டும்.

ஆக அருகிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

காவல்துறையிடம் பதிவுசெய்த புகார், உங்களுடைய இரண்டு நிழற் படங்கள், சிங்கப்பூர்க் குடியுரிமை ஆவணவங்களுடன் அந்தத் தூதரகங்களுக்குச் செல்லலாம்.

வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் சென்றவர்களின் விவரங்களைச் சரிபார்த்துவிட்டு அவர்களுக்குச் சிங்கப்பூர் திரும்ப அடையாள ஆவணம் ஒன்று கொடுக்கப்படும்.

அதை வைத்துக்கொண்டு நீங்கள் சிங்கப்பூர் திரும்பியதும், புதிய கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கல்விக்காகவோ வேலைக்காகவோ வெளிநாடு செல்பவர்கள் மாற்றுக் கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க, தூதரகங்கள் உதவிசெய்யும்.

2. கைத்தொலைபேசியைக் காணவில்லை

iPhone திறன்பேசிகளைப் பயன்படுத்துவோர், அதிலிருக்கும் 'Find My iPhone' வசதியைப் பயன்படுத்தித் தேடலாம்.

Android திறன்பேசிகளைப் பயன்படுத்துவோர் Googleஇன் 'Find My Device' அமைப்பைப் பயன்படுத்தலாம்.

இவற்றின் வழி கைத்தொலைபேசியைக் கண்டுபிடிக்கலாம்.

அல்லது தொலைவிலிருந்தே அதைச் செயலிழக்கச் செய்யலாம்.

அல்லது அவற்றில் இருக்கும் தகவல்களை அழிக்கவும் செய்யலாம்.

3. பணப்பையைக் காணவில்லை

அனைத்து ரொக்க அட்டைகளையும் உடனே ரத்துசெய்யவேண்டும்.

வங்கிச் செயலி வழியாகவோ வங்கியை அழைத்தோ அவ்வாறு செய்யலாம்.

பெரும்பாலான பயணக் காப்புறுதி நிறுவனங்கள், அத்தகைய தொலைபேசி அழைப்புக்குரிய கட்டணத்தை வழங்கும்.

அடுத்ததாகப் பணமில்லாமல் வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட நிலையில் Mastercard போன்ற சில கடன்பற்று அட்டை நிறுவனங்கள் அவசரச் செலவுக்குப் பணம் கொடுக்கும்.

இரண்டு மணி நேரத்துக்குள் அப்பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும்.

தொலைந்த கடன்பற்று அட்டைக்கு மாற்று அட்டையை, இரண்டு நாள்களுக்குள் உங்கள் வசிப்பிடத்துக்கு அனுப்பிவைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படக்கூடும்.

Visa கடன் அட்டை நிறுவனமும், அதேபோன்ற சேவைகளை வழங்குகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்