Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடற்பயிற்சி செய்யும்போது வலி ஏற்படுவது நல்லதா?

நாம் உடற்பயிற்சி செய்யும்போது வலி ஏற்படுவது உண்டு.

வாசிப்புநேரம் -
உடற்பயிற்சி செய்யும்போது வலி ஏற்படுவது நல்லதா?

(படம்: Pixabay)

நாம் உடற்பயிற்சி செய்யும்போது வலி ஏற்படுவது உண்டு.

ஆனால், அளவுக்கு அதிகமான வலி ஏற்படுவது நல்லதா?

உடற்பயிற்சியின்போது வலி ஏற்பட்டால், எப்போது நிறுத்திக்கொள்ள வேண்டும்?

அதுபற்றி, CNA Lifestyle தகவல் வெளியிட்டது.

முதல் தடவை உடற்பயிற்சி செய்யும்போதுகூட கடுமையான காயம் ஏற்படலாம் என்று, சாங்கி பொது மருத்துவமனையின் விளையாட்டு, உடற்பயிற்சிப் பிரிவு மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஐவி லிம் தெரிவித்தார்.

குறிப்பாக ஒருவர், மிதமிஞ்சித் தமது உடலை வருத்திக்கொள்ளும்போதோ பழக்கமில்லாத அதிகத் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போதோ அவ்வாறு நேரக்கூடும் என்றார் அவர்.

(படம்: Pixabay)

(படம்: Pixabay)

தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டால்,
Rhabdomyolysis எனும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று Tan Tock Seng மருத்துவமனை ஆலோசகர் Endean Tan கூறினார்.

தசை நார்கள் சிதைந்து போகும் அந்த நிலை,
அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்கப்படுவதில்லை.

சிதைந்த தசை நார்கள் ரத்தத்தில் கலக்கும்போது, அணுக்களில் நச்சுத்தன்மை ஏற்படலாம்.

குறிப்பாக, சிறுநீரகம் அதனால் பாதிக்கப்படலாம்.

வலி கூர்மையாகவோ கடுமையாகவோ இருந்தால், அல்லது வீக்கம் போன்ற பிற அறிகுறிகளோடு தொடர்புடையதாகவோ இருந்தால் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு, ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

(படம்: Unsplash/rawpixel)

(படம்: Unsplash/rawpixel)

உடற்பயிற்சி செய்தபின் சில நாள்களில் மறைந்துவிடும் தசைவலி, இயல்பானது.

ஆனால், உடற்பயிற்சியின்போது அல்லது அதற்குப் பிறகு மூட்டுகளில் ஏற்படும் வலி நல்லதல்ல என்று கூறப்படுகிறது.

- CNA Lifestyle 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்