Images
  • parental diet (1)
    (படம்: AFP/STR)

கரு உருவாவதற்கு முன்பே பெற்றோர் தங்களின் உடல்நலத்தைப் பேணிக்காக்க வேண்டும்

கரு உருவாவதற்கு முன்பே பெற்றோர் தங்கள் உடல்நலத்தைப் பேணிக்காப்பது முக்கியம் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

பெற்றோர் உட்கொள்ளும் உணவு தாயின் வயிற்றில் வளரும் கருவைப் பாதிக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

கருவுற்றிருக்கும் தாய் மது அருந்துவதாலும் புகைபிடிப்பதாலும் மட்டுமே குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

உணவுப் பழக்கமும் மிகவும் முக்கியம். அதேநேரம் தாய் மட்டுமல்ல தந்தையின் உடல் நலமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஆகையால் கருவுறுவதற்கு முன்பே பெற்றோர் இருவரும் சீரான, ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பது அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.  

Top