Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்குவது எப்படி?

வாழ்க்கைப் பயணத்தில் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது ஒரு சுவையான சவால்.

வாசிப்புநேரம் -
குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்குவது எப்படி?

படம்: Pixabay

வாழ்க்கைப் பயணத்தில் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது ஒரு சுவையான சவால்.

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களும், சவாலான வாழ்க்கைமுறையும் மன அழுத்தத்தை உண்டாக்குவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, பிள்ளைகளுக்கும்தான்.

எப்படிப் பிள்ளைகளை மன அழுத்தமின்றி வளர்ப்பது:

1. விளையாடச் சொல்லுங்கள்

குழந்தைகளை முதலில் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட விடுங்கள். விளையாட்டில் வெற்றி, தோல்வி சாதாரணம், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை போன்ற பண்புகளை அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

2.தோல்வியை ஒரு பாடமாகப் பார்க்கச் சொல்லுங்கள்

தோல்விகளை அனுபவமாக மாற்றச் சொல்லுங்கள். முடிந்தவரை முயற்சிசெய்யும் அணுகுமுறையை வளர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்.

3.சுதந்திரம் கொடுக்கவேண்டும்

பிள்ளைகள் முடிவெடுப்பதில் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அவர்களின் ஆர்வத்திற்கு ஊக்கம் கொடுக்கவேண்டும்.

4.ஒப்பிட வேண்டாம்

மற்ற குழந்தைகளுடன் அவர்களுடைய முயற்சியை ஒப்பிட வேண்டாம். இது அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைப்பதோடு மன அழுத்தத்தையும் தரும்.

5.குழந்தைகளுடன் பேசுங்கள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தினமும் 20வது நிமிடமாவது பேசலாம். அவர்களுடைய நாள் எப்படி இருந்தது, பள்ளியில் என்ன நடந்தது என்பதுபற்றிக் கேட்கலாம். இது குழந்தைகளின் மனப்போக்குபற்றி அறிந்துகொள்ள உதவும்.

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்