Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீங்கள் வாங்கும் வாசனைத் திரவம் உண்மையானதா? போலியானதா?

80 வெள்ளிக்குமேல் விற்கப்படும் வாசனைத் திரவம் ஒரு கடையில் 12 வெள்ளிக்கு விற்கப்படுவதைக் கண்டால், அதை உடனடியாக வாங்க ஆசை இருக்கலாம்.

வாசிப்புநேரம் -


80 வெள்ளிக்குமேல் விற்கப்படும் வாசனைத் திரவம் ஒரு கடையில் 12 வெள்ளிக்கு விற்கப்படுவதைக் கண்டால், அதை உடனடியாக வாங்க ஆசை இருக்கலாம்.

ஆனால் வாசனைத் திரவம் உண்மையானதா? போலியானதா?
அந்தச் சந்தேகம் வரும்போது நம்மில் பலருக்கு உண்மையான வாசனைத் திரவத்தைக் கண்டறிவதில் சிரமம் இருக்கும்.

(படம்: Pixabay)

- விற்பனையாளர் உண்மையான வாசனைத் திரவம் விற்பனை செய்வதற்குப் பெயர் பெற்றவரா என்பதை உறுதி செய்யவேண்டும்.
மலிவு விற்பனைக் காலத்தில் அந்தக் கடைகளில் திரவம் குறைவான விலையில் விற்கப்பட்டால் அச்சம் தேவையில்லை.

-இணைய விற்பனையாளர் என்றால், விற்பனைத் தளத்தில் அவரின் முகவரிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யவேண்டும்.

-விற்பனைப் பொருள்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை விற்பனையாளரிடம் இருந்தால் நல்லது.

(படம்: Pixabay)

- வாசனைத் திரவத்தின் தோற்றத்தைப் பற்றி முன்பே அறிந்துகொள்ளவேண்டும். வாசனைத் திரவத்தின் நிறம், தனிமுத்திரை சின்னம், பெயர், போத்தலின் குறிப்பிட்ட வடிவம், பொட்டலத்தின் நிறம் ஆகியவற்றைக் கவனிக்கவேண்டும்.

- திரவத்தின் பொட்டலத்தில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களில் எழுத்துப் பிழை இல்லை என்பதை உறுதி செய்யவேண்டும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்