Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கைத்தொலைபேசிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டிய சூழல்கள்

அப்படிப்பட்ட சூழ்நிலைகள் யாவை?

வாசிப்புநேரம் -
கைத்தொலைபேசிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டிய சூழல்கள்

(படம்: Pixabay)

இன்றைய அறிவார்ந்த யுகத்தில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது கடினம் தான். ஆனால் சில சூழ்நிலைகளில் அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மையை விளைவிக்கும்.

அப்படிப்பட்ட சூழ்நிலைகள் யாவை?

1) கடைகளில் பொருட்கள் வாங்கும்போது

வாங்கும் பொருட்களுக்குப் பணம் கட்டும்போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவது மரியாதையற்ற செயலாகக் கருதப்படுகிறது. காசாளரை இதற்கு முன் பார்த்ததில்லை என்ற காரணத்தால், அவர்கள் நமக்குச் சேவை வழங்கும்போது நாம் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது முறையற்ற செயல். 

2) வேலைச் சந்திப்புகளின்போது

வேலை நேரத்தில் கூட்டங்கள் நிகழும்போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்யும்போது உங்கள் கவனம் அங்கு இல்லையென்று சக ஊழியர்கள் எண்ணத் தோன்றும். இதுவே நீங்கள் ஒரு முதலாளியாக இருந்தால், ஊழியர்களுக்கு உங்கள் மீது கெட்ட அபிப்பிராயம் வரக்கூடும்.

3) ஒருவருடன் நேருக்கு நேர் உரையாடிக் கொண்டிருக்கும்போது

ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது கைத்தொலைபேசியை எடுத்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்வது அவரை அவமதிப்பதற்குச் சமம்.

4) பொது இடங்களில் இருக்கும்போது

நம்மைச் சுற்றி மக்கள் பலர் இருக்கும்போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்தினால், மெதுவாகப் பேச வேண்டும். கத்திப் பேசுவதை அனைத்துச் சூழலிலும் தவிர்ப்பது நல்லது. நாம் என்ன பேசுகிறோம் என்று மற்றவர்களுக்குத் தெரியவேண்டும் என்பது அவசியமல்ல. 

5) வாகனம் ஓட்டும்போது

இது நமக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றுதான். வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்தக்கூடாது என்பது சட்டம். அதையும் மீறி சிலர் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து ஓட்டுநர்களுக்கும் பாதசாரிகளுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்