Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கைத்தொலைபேசியால் பருக்கள் - தீர்வு என்ன?

பொதுக் கழிப்பறைத் தொட்டியுடன் ஒப்பிடுகையில் உங்கள் கைத்தொலைபேசியின் வெளிப்புறத்தில் 10 மடங்கு அதிகமான கிருமிகள் உள்ளன என்கின்றன ஆய்வுகள்.

வாசிப்புநேரம் -
கைத்தொலைபேசியால் பருக்கள் - தீர்வு என்ன?

(படம்: Pixabay)

பொதுக் கழிப்பறைத் தொட்டியுடன் ஒப்பிடுகையில் உங்கள் கைத்தொலைபேசியின் வெளிப்புறத்தில் 10 மடங்கு அதிகமான கிருமிகள் உள்ளன என்கின்றன ஆய்வுகள்.

அவற்றுடன் முகத்திலுள்ள வியர்வை, எண்ணெய், ஒப்பனைப் பூச்சு ஆகியவை சேரும்போது முகத்தில் பருக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

ஒரு முறை கைத்தொலைபேசியைப் பயன்படுத்தும்போது அதில் ஒட்டும் வியர்வை, எண்ணெய், ஒப்பனைப் பூச்சு ஆகியவை மறுமுறை கைத்தொலைபேசியைப் பயன்படுத்தும்போது முகத்தில் பருக்கள் தோன்றக் காரணமாகக்கூடும்.

மேலும் அவை முகத்திலுள்ள pores எனும் துளைகளில் அடைப்பையும் ஏற்படுத்துகின்றன.

முகத்தின் ஒரு புறத்தில் மட்டும் அதிகமான பருக்கள் தோன்றுவது இதன் முக்கிய அறிகுறி.

இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் கைத்தொலைபேசியை அவ்வப்போது கிருமிநாசினி கலந்த துடைப்பான்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அல்லது கைத்தொலைபேசியில் பேசும்போது bluetooth கருவிகளைப் பயன்படுத்தலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்