Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கைத்தொலைபேசியைக் கீழே வையுங்கள், ஆயுளைக் கூட்டுங்கள்

கைத்தொலைபேசிகள் நம் வாழ்க்கையைச் சுலபமாக்குகின்றன. அதேநேரத்தில் நம் ஆயுளைக் குறைக்கின்றன.

வாசிப்புநேரம் -


(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கைத்தொலைபேசிகள் நம் வாழ்க்கையைச் சுலபமாக்குகின்றன. அதேநேரத்தில் நம் ஆயுளைக் குறைக்கின்றன.

தூக்கம், அன்றாட உறவுகள், தன்னம்பிக்கை, நினைவாற்றல், கவனத்திறன் போன்றவற்றையும் அவை பாதிக்கின்றன.

கைத்தொலைபேசியைப் பயன்படுத்தும்போது மனஅழுத்தத்தினால் சுரக்கும் cortisol எனும் ஒருவகைச் சுரப்பி ஆயுளைச் சுருக்கும் தன்மையுடையது.

நாளொன்றுக்குச் சராசரியாக சுமார் 4 மணிநேரம் நாம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துகிறோம்.

நாம் சும்மா இருந்தாலும் அவ்வப்போது வரும் அறிவிப்பு ஒலிகள் உடனே கைத்தொலைபேசியை எடுத்துப் பார்க்க நம்மைத் தூண்டுகின்றன.

விளைவு? நம் உடலில் cortisol சுரப்பி தொடர்ந்து சுரந்துகொண்டே இருக்கிறது.

இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து நாளடைவில் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகக் கைத்தொலைபேசியில் நமக்குத் தேவையற்ற, நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய செயலிகளை முகப்புப் பக்கத்திலிருந்து அகற்றிவிடலாம். ஒருநாளில் சில மணிநேரம் கைத்தொலைபேசி பக்கமே போகாமல் இருக்கப் பழகிக்கொள்ளலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்