Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முக்கியம் துடிப்பான வாழ்க்கைமுறை

இளம் பிள்ளைகளிடையே கை,கால் அசைவுகளும் கவனிக்கும் ஆற்றலும் அதிகரிக்கும்.

வாசிப்புநேரம் -

சிறு குழந்தைகள் தவழ்வது, முதல் அடி எடுத்து வைப்பது போன்றவற்றைப் பார்க்கும் பெற்றோருக்கு அலாதி இன்பமாக இருக்கும்.

குழந்தை வளரும் பருவத்தில் சுறுசுறுப்பாக இருப்பது மிக முக்கியம்.

எனினும் வயது அதிகரிக்க, அவர்களின் உடலுக்கு வலிமை சேர்க்கும் நடவடிக்கைகள் குறையலாம்.

(படம்:Pixabay)
(படம்:Pixabay)

ஐந்து வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு எவ்வளவு நேர உடற்பயிற்சி தேவை?

அடிப்படை சுகாதாரத்தை நிலைநாட்ட குறைந்தது நாளுக்கு 60 நிமிடங்கள் அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

(படம்:Pixabay)

சைக்கிள் ஓட்டுவது, விளையாட்டு இடத்துக்குச் சென்று ஓடி விளையாடுவது, காற்பந்து, கூடைப்பந்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் கவனம் செலுத்தலாம் என்றும் அவர்கள் கூறினர்.

வாரத்துக்குக் குறைந்தது மூன்று முறை, தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதும் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

(படம்:Pixabay)

கயிறு தாண்டுதல், நொண்டி ஆட்டம் போன்றவை உதாரணங்களாகக் கூறப்பட்டன.

பிள்ளைகளின் துடிப்பான வாழ்க்கைமுறைக்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் வழி அவர்களின் உடல்நலம், மனநலம், மனப்போக்கு போன்றவை மேம்படும்.

(படம்:Pixabay)

அதோடு அவர்களின் தன்னம்பிக்கையும் வெகுவாக மேம்படும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்