Images
  • Pi Day (1)
    (படம்: Pixabay)

இன்று கொண்டாடப்படும் Pi நாள் - என்ன காரணம்?

இன்று Pi நாள்.

ஒரு வட்டத்தின் சுற்றளவை அதன் குறுக்களவால் வகுப்பதால் கிடைக்கும் எண் Pi என்று அழைக்கப்படுகிறது.

வட்டங்கள், வட்டமான வடிவங்கள் ஆகியவற்றை அளவிட Pi பயன்படுகிறது.

Pi குறிப்பிடும் எண்ணின் விரிவாக்கம் 1 டிரில்லியன் எண்கள் வரை கணிக்கப்பட்டுள்ளது.

3.14159 என்று சுருக்கி எழுதப்படும் அதன் முழு வடிவம் தொடர்ந்துகொண்டே போகும்.

இதனால் Pi பல கணித ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒன்று.

இத்தகைய ஒருவர் சான் ஃபிரான்ஸிஸ்கோவின் (San Francisco) லேரி ஷா (Larry Shaw).

1988இல், சான் ஃபிரான்ஸிஸ்கோவில் உள்ள அரும்பொருளகம் ஒன்றில் உள்ள வட்டமான இடங்களில் லேரி ஷா ஒரு அணிவகுப்பை நடத்தினார்.

அதன் பின், Pi என்ற சின்னத்தைப் போன்று ஆங்கிலத்தில் ஒலி எழுப்பும் Pie உணவை அனைவரும் உண்டனர்.  

உங்கள் கருத்து

Top