Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கனவுகளை நினைவில் வைத்திருக்க உதவும் மாத்திரை

ஒவ்வொரு இரவும் நம்மால் நினைவுகூர முடியாத பல கனவுகளை நாம் காண்கிறோம். ஒரு மனிதர் தம் வாழ்க்கையில் சராசரி சுமார் 6 ஆண்டுகளைக் கனவுகளில் கழிக்கிறார்.

வாசிப்புநேரம் -
கனவுகளை நினைவில் வைத்திருக்க உதவும் மாத்திரை

படம்: Pixabay

ஒவ்வொரு இரவும் நம்மால் நினைவுகூர முடியாத பல கனவுகளை நாம் காண்கிறோம். ஒரு மனிதர் தம் வாழ்க்கையில் சராசரி சுமார் 6 ஆண்டுகளைக் கனவுகளில் கழிக்கிறார்.

கனவுகளை நினைவுகூர்வதன் மூலம் அவற்றை ஓரளவுக்கு நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

கனவுகளை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் கெட்ட கனவுகளைச் சமாளிப்பது, phobia போன்ற அளவுகடந்த பயங்கள், பிரச்சினைகளைப் புத்தாக்க சிந்தனையுடன் எதிர்கொள்வது போன்ற பல பயன்களைப் பெறலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இத்தகைய பயன்களை விளைவிக்கக்கூடிய கனவுகளை நினைவுகூர உதவும் மாத்திரையை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் (Adelaide) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அது வைட்டமின் B6 மாத்திரை. ஆய்வில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். வைட்டமின் B6 மாத்திரைகளை உட்கொண்டவர்கள் தங்கள் கனவுகளை நன்றாக நினைவூகூர்ந்தனர்.

இருப்பினும் B6 மாத்திரைகளை அளவுக்கு மிஞ்சி உட்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்