Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகப் பராமரிப்புக்கு நேரம் இல்லையா? - இது உங்களுக்கு

முகத்தில் பருக்கள் ஏற்படுகின்றன.  ஆனால் அவை முகத்தில் அதிகமாக ஏற்பட்டால்...?

வாசிப்புநேரம் -
முகப் பராமரிப்புக்கு நேரம் இல்லையா? - இது உங்களுக்கு

(படம்: Pixabay)


முகத்தில் பருக்கள் ஏற்படுவது சாதாரணமானதல்ல.

சருமத்திலுள்ள எண்ணெய், தோலிலுள்ள இறந்த உயிரணுக்களுடன் சேரும்போது கிருமிகள் உண்டாகின்றன.

இதனால் முகத்தில் பருக்கள் ஏற்படுகின்றன.

ஆனால் அவை முகத்தில் அதிகமாக ஏற்பட்டால்...?

பருக்கள் அகன்றாலும் முகத்தில் அவை விட்டுச்செல்லும் தழும்புகள் ஒருவருடைய தன்னம்பிக்கையைப் பாதிக்கலாம்.

இதனால் மனவுளைச்சல் ஏற்படலாம்.

முகத்தில் பருக்கள் ஏற்படுவதை எப்படி தவிர்ப்பது?

1. முகத்தை ஒழுங்காக கழுவ வேண்டும்

அளவுக்கு அதிகமான எண்ணெய், அழுக்கு, வியர்வை சேராமல் இருக்க முகத்தை ஒழுங்காகக் கழுவுவது அவசியம்.

ஆனால், நாளுக்கு இரு முறைக்கு மேல் முகத்தைக் கழுவினால் சருமம் வறண்டு போகலாம்.

2. சருமத்தின் ஈரப்பதம் உறுதிசெய்ய 'Moisturizers'

(படம்: Pixabay)

சருமம் வறண்டு போவதை மட்டுப்படுத்துவதற்காக சருமம் அதிக அளவு எண்ணெயைச் சுரக்கக்கூடும்.

இதனால் 'Moisturizers' எனும் முகப் பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தி சருமத்தின் ஈரப்பதத்தைச் சீராக்கலாம்.

3. தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்

உடலில் வறட்சி ஏற்பட்டால், சருமத்தில் கூடுதல் எண்ணெய் சுரக்க நேரிடும்.

இதனால் பருக்கள் உண்டாகலாம்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது சுமார் 2 லிட்டர் தண்ணீர் பருகவும்.

4. முக ஒப்பனையைக் குறைத்துக்கொள்ளலாம்

(படம்: Pixabay)

முகத்தில் பருக்கள் ஏற்படும்போது அவற்றை மறைக்க அதிக ஒப்பனை போடத் தோன்றும்.

ஆனால் முடிந்த அளவு ஒப்பனையைத் தவிர்ப்பது நல்லது.

ஒப்பனை அதிகம் பயன்படுத்துவதால் சருமத்திலுள்ள 'pores' எனும் துளைகள் அடைக்கப்படலாம். இதனால் பருக்கள் ஏற்படலாம்.

5. முகத்தைத் தொட வேண்டாம்

ஒரு நாளில் நாம் எத்தனையோ பொருள்களைத் தொடுகிறோம்.

அவற்றிலுள்ள அழுக்கு, கிருமிகள் நம் கையிலும் சேர்கின்றன.

ஒவ்வொரு முறை முகத்தைத் தொடும்போதும் இந்தக் கிருமிகளும் அழுக்கும் முகத்தில் சேரும் சாத்தியம் அதிகரிக்கிறது.

6. மனவுளைச்சலைக் கட்டுப்படுத்துங்கள்

அதிகமான மனவுளைச்சலிலிருக்கும்போது சருமத்தில் கூடுதல் எண்ணெய் சுரக்கும்.

இதனால் பருக்கள் உண்டாகக்கூடும்.

யோகா, இசை கேட்பது போன்று மனவுளைச்சலைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

முகத்தில் ஏற்படும் பருக்களை எப்படி சமாளிப்பது?

1. கடைகளில் விற்கப்படும் சில பராமரிப்பு கிரீம்களைப் பயன்படுத்தலாம்

'Benzoyl peroxide', 'salicylic acid', 'sulfur' ஆகிய ரசாயனங்கள் இந்த கிரீம்களில் பொதுவாக இருக்கும்.

2. கிருமி எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics) உட்கொள்ளலாம்

(படம்: Pixabay)

மோசமான பருக்கள் இருந்தால் மருத்துவரிடமிருந்து கிருமி எதிர்ப்பு மருந்துகள் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அவற்றை அளவுக்கு மீறி உட்கொள்ளக்கூடாது


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்