Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் 'வென்னிலா' சுவையூட்டி!

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், நுண்ணுயிரிகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து வென்னிலா (vanilla) சுவையூட்டியைத் தயாரித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், நுண்ணுயிரிகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து வென்னிலா (vanilla) சுவையூட்டியைத் தயாரித்துள்ளனர்.

Green Chemistry ஆய்வு சஞ்சிகையில் எடின்பர்க் (Edinburgh) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்பு குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட E. coli நுண்ணுயிரிகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து Vanilla சுவையூட்டியைத் தயாரித்துள்ளனர்.

உணவில் சுவையையும், வாசனையும் கூட்ட அதைப் பயன்படுத்தலாம்; முக ஒப்பனைப் பொருள்களிலும் பூச்சுக்கொல்லி மருந்துகளிலும் அதைப் பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் போத்தலையும், E. coli கிருமியையும் சேர்த்து விஞ்ஞானிகள் vanillina சுவையூட்டியைத் தயாரித்துக் காட்டினர். அது மனிதர்கள் உட்கொள்வதற்கு பாதுகாப்பானதா என்பதை அவர்கள் இன்னும் உறுதிசெய்யவில்லை.

அதைத் தீர்மானிக்கத் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் முயற்சியில் vanillina சுவையூட்டி, ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்