Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிளாஸ்டிக் உணவுப்பெட்டிகளை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா? அதில் உள்ள ஆபத்தை அறிந்துகொள்ளுங்கள்

பொதுவாக நம்மில் பலர் பிளாஸ்டிக் பெட்டிகளைப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

வாசிப்புநேரம் -
பிளாஸ்டிக் உணவுப்பெட்டிகளை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா? அதில் உள்ள ஆபத்தை அறிந்துகொள்ளுங்கள்

(கோப்புப் படம்: REUTERS)

பொதுவாக நம்மில் பலர் பிளாஸ்டிக் பெட்டிகளைப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

அதிலும் ஒருமுறை பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் பெட்டிகளைப் பலரும் இன்னும் சில முறை பயன்படுத்திவிட்டு வீசுவர்.

உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட முடியாத இந்த காலக்கட்டத்தில், பல வீடுகளில் இத்தகைய பிளாஸ்டி பெட்டிகள் ஏராளனமானவை குவிந்திருக்கும்.

ஆனால் பிளாஸ்டிக் பெட்டிகள் ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் அவற்றில் வேறுபாடு உள்ளது என்பது தெரியுமா? அவை எந்த அளவு சூடு தாங்கக் கூடியவை என்று யோசித்ததுண்டா?

பல முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உணவுப்பெட்டிகளுக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் உணவுப்பெட்டிகளுக்கும் ரசயான அமைப்பு (chemical structure) ஒன்றுதான் என்கிறார், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக வேதியியல் பிரிவின் துணைப் பேராசிரியரான சுரேஷ் வலியவீட்டில் (Suresh Valiyaveettil).

அதன் தொடர்பில் CNA முன்வைத்த சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ஒருமுறை பயன்படுத்தி வீசக்கூடிய பிளாஸ்டிக் பெட்டியை நுண்ணலை அடுப்பில் (microwave oven) உணவைச் சூடாக்கப் பயன்படுத்தலாமா?

அவ்வாறு செய்வதைத் தவிர்க்கவும். நுண்ணலைகளின் சூட்டில் பிளாஸ்டிக் உருகுவதால் அதில் உள்ள சிறிய மூலக்கூறுகள் (molecules) உங்கள் உணவில் கலக்கலாம்.

பிளாஸ்டிக் உணவுப்பெட்டிகளை சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

  • சூடான உணவுப்பொருள்களை அதில் வைப்பதைத் தவிர்க்கவும்.
  • உணவுப் பொருளை சூடாக பிளாஸ்டிக் பெட்டிகளில் வாங்கிவந்தால், முடிந்தவரை சீக்கிரமாக அவற்றைப் பீங்கான் பாத்திரத்துக்கு மாற்றிவிடவும்.
  • பிளாஸ்டிக் பெட்டிகளை நுண்ணலை அடுப்பில் சூடுகாட்டுவதையோ சூடான இடங்களில் வைப்பதையோ தவிர்க்கவும்.
  • - எலுமிச்சம்பழச்சாறு போன்ற அமிலங்கள் நிறைந்த உணவுப்பொருள்களை அதில் வைப்பதைத் தவிர்க்கவும்.
  • Bisphenol A (BPA) , phthalates போன்ற ரசாயனங்கள் உள்ள பெட்டிகளைப் பயன்படுத்தவேண்டாம்.
  • ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பெட்டியை மீண்டும் பயன்படுத்தவேண்டாம்.
  • உணவில் இருக்கும் சூடு பிளாஸ்டிக் உணவுப்பெட்டியுடன் தொடர்பில் வந்ததும், அதன் வடிவம் மாறும். அதனால், அதனை மீண்டும் பயன்படுத்துவது உகந்ததல்ல.


பிளாஸ்டிக் உணவுப்பெட்டிகளைவிட சிலிகான் (silicone) உணவுப்பெட்டிகள் சிறந்தவையா?

  • பிளாஸ்டிக் உணவுப்பெட்டிகளைவிட சிலிகான் உணவுப்பெட்டிகள் பாதுகாப்பானவை.
  • இருப்பினும், அவற்றுள் பிராணவாயு (Oxygen) விரைவாக நுழையும், வெளியேறும். இதனால் அதிலிருக்கும் உணவு விரைவாக வீணாகக்கூடிய சாத்தியம் உண்டு.
  • உணவிலிருந்து வரும் வாடை அதில் நீண்ட நேரம் தங்கியிருக்கும்.
  • அவற்றை நுண்ணலை அடுப்பில் வைக்கலாம் என்றாலும், முடிந்தவரை பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது சிறந்தது என்றார் டாக்டர் வலியவீட்டில்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்