பிரிட்டிஷ் இளவரசர் ஜார்ஜின் ஏழாம் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படங்கள்
பிரிட்டிஷ் இளவரசர் ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் (George Alexander Louis) இன்று தமது 7ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
பிரிட்டிஷ் இளவரசர் ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் (George Alexander Louis) இன்று தமது 7ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அரியணை வரிசையில் அவர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
பிறந்தநாளை முன்னிட்டு இளவரசர் ஜார்ஜின் ஆக அண்மைய இரண்டு படங்களை கென்சிங்டன் (Kensington) அரண்மனை நேற்று வெளியிட்டது.
அந்தப் படங்கள், இளவரசர் ஜார்ஜின் தாயார் கேட் வில்லியமால் இம்மாதம் எடுக்கப்பட்டவை என்று அரண்மனை கூறிற்று.
இருப்பினும் COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக இளவரசர் ஜார்ஜ் தமது பிறந்தநாளை வீட்டிலேயே கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிறந்தநாளை அவர் கரீபியன் தீவான மஸ்டிக்கில் தமது குடும்பத்தாருடன் கொண்டாடினார்.