Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நோய்ப்பரவல் சூழலில் பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துவது எப்படி?

நோய்ப்பரவல் சூழலில் பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துவது எப்படி?

வாசிப்புநேரம் -
நோய்ப்பரவல் சூழலில் பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துவது எப்படி?

(படம்: Revathi Valluvar)

நோய்ப்பரவல் காலக்கட்டத்தில் நம்மிடையே பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துவதைப் பற்றிய பயம் இருக்கலாம்.

இருப்பினும் அதன் காரணமாக வெளியே செல்வதை அறவே தவிர்ப்பது கடினம். வெளியே செல்லும்போது நம்மில் பலருக்கும் கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது இருக்கக்கூடிய ஆபத்து:

1. கழிவறையிலுள்ள அனைத்துப் பகுதிகளும் மற்றவர்களால் தொடப்பட்டவை

- தொற்றுநோயுள்ளவர்கள் தொடும் பகுதிகளை மற்றொருவர் தொடும்போது அவருக்கும் நோய் தொற்றலாம்

- E coli போன்ற கொடிய கிருமிகள் அவ்வாறு பரவுகின்றன

- யார் எதைத் தொட்டிருக்கிறார் என்பதை நாம் அறியமுடியாது

2. கழிவறைகள் மூடப்பட்ட இடங்களாக இருப்பதால் காற்றுவழியே நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன.

- கழிப்பிடங்கள் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்படும் போது அதிலிருந்து வெளியாகும் காற்று கிருமிகளைக் கொண்டிருக்கலாம்.

- கழிவறைகளின் காற்றில் உள்ள கிருமிகள் 2 மணி நேரம் வரை கழிவறையில் உயிர்வாழும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துவோர் நோய் பரவாமல் இருக்க என்ன செய்யலாம்?

1. முகக்கவசங்களை அணியவும்

- அவ்வாறு செய்யும்போது, நீங்கள் உங்கள் மூக்கையோ வாயையோ தொடமுடியாது, அதன் காரணமாக நோய் பரவாது

2. காற்றோட்டம் உள்ள பெரிய பொதுக்கழிவறைகளைத் தேர்ந்தெடுங்கள்

- அதிகக் காற்றோட்டம் இருக்கும் போது, நோய்க்கிருமிகள் ஒரே இடத்தில் இல்லாமல் மற்ற இடங்களுக்குச் சென்றுவிடும்

3. மற்றவர்கள் உங்களுக்கு முன் கழிப்பிடத்தைப் பயன்படுத்தி வெளியே செல்லும் போது 1 நிமிடம் காத்திருந்து அதனுள் நிழையவும்

- காற்றில் நோய்க்கிருமி மற்ற இடங்களுக்குச் சென்றுவிட நேரம் அளியுங்கள்

4. கழிப்பிட அமர்வின் மேல் தாள் உறையைப் பயன்படுத்த வேண்டாம்

- அதில் நோய்க்கிருமிகள் இருக்கலாம். அதனைத் தொடும்போது உங்கள் கைகளில் கிருமிகள் வந்து சேரலாம்

5. பெண்கள் மாதவிடாய் சார்ந்த பொருள்களைத் தொட்டியில் போடும்போது அதன் மூடியைக் கையால் தொடவேண்டாம்

- அதன் மூடியை டிஷ்யூ தாள்கொண்டு திறக்கும்போது, அதில் அடங்கியுள்ள கிருமிகள் கையில் சேர மாட்டா.

6. கழிவறையைப் பயன்படுத்திய பின் விரைவாக வெளியேறவும்

- நீண்ட நேரம் மூடப்பட்ட பொது இடத்தில் இருக்கும் போது ஒருவருக்கு நோய் பரவும் வாய்ப்பு் அதிகமாகிறது

7. வெளி இடங்களுக்குச் செல்லும்போது, கழிவறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வழிகள்:

- அதிகளவில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கலாம்

- நீண்ட நேரம் வெளியே இருப்பதைத் தவிர்க்கலாம்

- வீட்டைவிட்டு வெளியாகும் முன் கழிவறையைப் பயன்படுத்தலாம்
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்