Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனம் நெகிழச்செய்யும் நாய்களின் பாவனை - என்ன ரகசியம்?

'Puppy dog eyes' என்ற கவலை தோய்ந்த கண்களுடன் நாய்கள் நம்மைப் பார்க்கும்போது நம் மனம் உருகி விடுகிறது.

வாசிப்புநேரம் -
மனம் நெகிழச்செய்யும் நாய்களின் பாவனை - என்ன ரகசியம்?

(படம்: Pixabay)

'Puppy dog eyes' என்ற கவலை தோய்ந்த கண்களுடன் நாய்கள் நம்மைப் பார்க்கும்போது நம் மனம் உருகி விடுகிறது.

அத்தகைய பாவனையைச் செய்ய நாய்கள் எவ்வாறு கற்றுக் கொள்கின்றன?

மனிதர்களுக்கு உள்ளதைப் போன்ற கண்புருவத் தசைகளைச் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் உருவாக்கிக் கொண்டுள்ளன என்பதை ஆய்வு ஒன்று காட்டுகிறது.

அதன் காரணமாகவே அவற்றின் 'Puppy dog eyes' பாவனையைக் கண்டு நாம் மனம் நெகிழ்கிறோம் என்றால் நம்ப முடிகிறதா?

Proceedings of the National Academy of Sciences என்ற அமெரிக்க சஞ்சிகை நடத்திய ஆய்வில் அந்தத் தகவல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வில் நாய்களின் பிரேதங்களும் அவற்றின் முன்னோர் எனக் கருதப்படும் ஓநாய்களின் பிரேதங்களும் ஒப்பிடப்பட்டன.

நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பும், ஓநாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பும் ஆராயப்பட்டது.

ஆய்வில் நாய்களுக்கு உள்ள புருவத் தசைகள் ஓநாய்களுக்கு இல்லை என்பது தெரியவந்தது.

நாய்களின் புருவத் தசைகள் மட்டுமே பரிணாம வளர்ச்சி கண்டுள்ளன.

நாய்கள் மனிதர்களைப் பார்க்கும்போது அவற்றின் புருவத் தசைகள் அசைந்து, கண்களைப் பெரிதாகக் காட்டும்.

அதுவே மனிதர்களை மனம் நெகிழச் செய்கிறது! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்