Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மூச்சுக்காற்று படுவதால் மங்கலாகும் மூக்குக் கண்ணாடி... அதனை ஈடுசெய்யும் 'சூடான' நூடல்ஸ் முகக்கவசம்!

முகக்கவசம் அணிந்திருக்கையில் மூக்குக் கண்ணாடி மீது மூச்சுக்காற்று படுவதால் கண்ணாடி அடிக்கடி மங்கலாவதுண்டு...

வாசிப்புநேரம் -
மூச்சுக்காற்று படுவதால் மங்கலாகும் மூக்குக் கண்ணாடி... அதனை ஈடுசெய்யும் 'சூடான' நூடல்ஸ் முகக்கவசம்!

(படம்: Reuters/Kim Kyung-hoon)

முகக்கவசம் அணிந்திருக்கையில் மூக்குக் கண்ணாடி மீது மூச்சுக்காற்று படுவதால் கண்ணாடி அடிக்கடி மங்கலாவதுண்டு...

அவ்வாறு ஏற்படும் போதெல்லாம், மூக்குக் கண்ணாடியை அணிந்திருக்கும் பலருக்கு எரிச்சலாக இருக்கும்.

இருப்பினும், 'ramen' முகக்கவசம் வழி, அதை நாவூற வைக்கும் வித்தியாசமான படைப்பாக மாற்றியமைத்துள்ளார், ஜப்பானில் ஒரு கலைஞர்!

கிண்ணம் ஒன்றில் Ramen எனும் நூடல்ஸ் வகை இருப்பதைப் போன்று, ஒரு முப்பரிமாண முகக்கவசத்தை, டக்காஹிரோ ஷிபாட்டா (Takahiro Shibata) எனும் கலைஞர் வடிவமைத்துள்ளார்.

Ramen பொதுவாகச் சுடச்சுட சாப்பிடப்படும் உணவு.

படைப்பின் வழி, மூக்குக் கண்ணாடி மங்கலாகும்போதெல்லாம், Ramen சூடாக இருப்பதைப் போன்று தோற்றமளிப்பது டக்காஹிரோவின் எண்ணம்!

Ramen-இல் பொதுவாக இருக்கும் இறைச்சித் துண்டுகளும் காய்கறிகளும் கூட அதில் இடம்பெற்றுள்ளன.

ஆனால், என்னதான் முகக்கவசம் பார்க்க சுவையாக இருந்தாலும், அது தினசரிப் பயன்பாட்டுக்கு உகந்ததில்லை...

அந்த முப்பரிமாண முகக்கவசத்தின் எடை ஒரு சிறு பொம்மைக்குச் சமம்!

அதைத் தினமும், முகத்தில் அணிய முடியுமா?!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்