Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அருகி வரும் விசித்திர ஆமை இனம்

பச்சை நிறப் பாசிதான் அதன் முதுகில் வளர்கிறது. 

வாசிப்புநேரம் -

பச்சை நிற முடி அதன் முதுகை அலங்கரிக்கிறது.

விநோதமான தோற்றத்துடன் காணப்படும் இந்த விசித்திர ஆமை விரைவில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் பகுதியில் உள்ள மேரி நதியில் வாழும் மேரி ரிவர் ஆமைகள் இப்போது அருகி வரும் இனம் என்று இந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.

(படம்:Chris Van Wyk/via REUTERS)

அருகி வரும் விலங்கினங்களில் அது 29வது இடத்தில் உள்ளது.

பச்சை நிறப் பாசிதான் அதன் முதுகில் வளர்கிறது.

ஒரு காலத்தில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட ஆமைகளின் தற்போதைய எண்ணிக்கை என்ன என்று ஆய்வாளர்களுக்குத் தெரியவில்லை.

அது வாழும் நதிப் பகுதியில் புதிய மீன் இனங்கள் அறிமுகம் செய்யப்படுவதால் இளம் ஆமைகளை மீன்கள் அச்சுறுத்தி வருவதாகத் தெரிகிறது.

(படம்:Chris Van Wyk/via REUTERS)

டைனசார்கள் வாழ்ந்த காலத்திலும் பூமியில் வாழ்ந்த இந்த ஆமைகளைப் பாதுகாக்குமாறு வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்