Images
  • cat chased by rat
    (படம்: Youtube Screengrab)

பூனையைத் துரத்திய சுண்டெலி

எலிகளைத் துரத்தும் பூனைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காலங்காலமாக இந்த இரண்டு விலங்குகளின் பகைமையைப் பற்றி எல்லோரும் அறிந்திருக்கலாம்.

ஆனால், லக்ஸம்பர்க் நாட்டில் இந்த வாரம், விசித்திரமான ஒரு சம்பவம். 

ஒரு பெரிய பூனையை, சிறிய சுண்டெலி துரத்தியது.

தொடக்கத்தில் பூனை, சுண்டெலியைப் பிடிக்க, அதை நோக்கி மெதுவாகச் சென்றது.

ஆனால், துணிச்சல் மிக்க சுண்டெலி இறுதியில் பூனை மீது பாய்ந்தது. இதை எதிர்பார்க்காத பூனை, பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

பூனையைத் துரத்திக்கொண்டே சென்றது சுண்டெலி.

இந்த விநோத, நகைச்சுவையான காட்சியை ஒருவர் படமெடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தார்.

காணொளியும் விலங்குகளின் வேகத்தில் இணையத்தை வலம் வருகிறது.

அந்தக் காணொளி இதோ:


 

Top