Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நோன்புப் பெருநாள் சிறப்பு உணவு: அடுக்கு ஜாலர், வட்லப்பம் கேள்விப்பட்டதுண்டா?

உணவில்லாமல் கொண்டாட்டமா? அதுவும் பண்டிகை நாளன்று...

வாசிப்புநேரம் -

உணவில்லாமல் கொண்டாட்டமா?

அதுவும் பண்டிகை நாளன்று...

உலகின் பல பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள், இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும், அதில் முக்கிய பங்கு வகிப்பது, கொண்டாட்டத்தைக் கோலாகலமாக்குவது உணவு தான்.

நோன்புப் பெருநாள் பண்டிகை ஒன்றாக இருந்தாலும், சிங்கப்பூரின் சில இந்தியச் சமூகங்கள் அன்று உட்கொள்ளும் உணவு வகைகள் சற்று மாறுபட்டவை.

அந்த வித்தியாசமான உணவு வகைகளைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால், அவை உணவகங்களில் அதிகம் விற்கப்படுவது இல்லை.

ஆனால், 'செய்தி' இருக்க, கவலை ஏன்...

நோன்புப் பெருநாள் அன்று உட்கொள்ளப்படும் 5 வித்தியாசமான உணவு வகைகளை நீங்களும் தெரிந்துகொள்ளலாம்...

அடுக்கு ஜாலர்

பலரும் ரொட்டி ஜாலரை உட்கொண்டிருக்கலாம். பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில், கடைகளில் ஒற்றையாக விற்கப்படும்.

பல அடுக்குகளாக அடுக்கப்பட்ட ரொட்டி ஜாலருக்கு இடையே சுமார் 2 அடுக்குக் கோழி அல்லது இறைச்சி மசாலா வைக்கப்படுவதே அடுக்கு ஜாலர்.

அடுக்குகள் ஒன்றாக அடுப்பில் வைத்து வாட்டி எடுக்கப்படும்.

நோன்புப் பெருநாளன்று, அடுக்கு ஜாலர் காலை உணவாக உட்கொள்ளப்படுவது வழக்கம்.

வட்லப்பம்

பல வீடுகளில் நோன்புப் பெருநாளில் கட்டாயம் செய்யப்படும் இனிப்பு வகை என்றால் அது வட்லப்பம்.

முட்டை, முந்திரி, பாதாம், சர்க்கரை ஆகியவை அதன் மூலப் பொருள்கள்.

(படம்: ரிஸ்வானா)

(படம்: ரிஸ்வானா)

பராசாப்பம்

அப்பத்தில் இன்னொரு வகை தான் பராசாப்பம்.

அப்ப மாவில், முட்டை, வெங்காயம், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், தேங்காய் பூ ஆகியவை கலந்து பராசாப்பம் சுடப்படுகிறது.

அதுவும் பெருநாளன்று காலை உணவாக உட்கொள்ளப்படுவது உண்டு.

டம்மடை அல்லது டம்ரூட்

பலகாரம் இல்லாத கொண்டாட்டமா?

டம்மடை அல்லது டம்ரூட் ரவை, நெய், முட்டை, சர்க்கரை ஆகியவைக் கொண்டு செய்யப்படுகிறது.

கேக் போன்ற தன்மை கொண்டது.

(படம்: ரிஸ்வானா)

(படம்: ரிஸ்வானா)

இஞ்சி கொத்துப் பணியாரம்

இந்தப் பலகாரம் மைதா மாவு, நெய், சர்க்கரை ஆகியவை கொண்டு செய்யப்படுகிறது.

அது, எண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படுகிறது.

அதன் தனித்துவமே அதன் வடிவம் தான்.

(படம்: யாஸ்மின்)

(படம்: யாஸ்மின்)

கூந்தல் பின்னல் போல் பின்னப்பட்டிருக்கும்.

(படம்: யாஸ்மின்)

(படம்: யாஸ்மின்)

படிக்கும்போதே நாவூறுகிறதா?

அவற்றைப் பற்றி உங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் மேலும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அனைவருக்கும் 'செய்தி'யின் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்