Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆண் பிள்ளைகளிடத்தில் வாசிப்புப் பழக்கம் குறைவாக இருப்பதற்குக் காரணம்?

பெண் பிள்ளைகள் கணிதம் செய்ய சிரமப்படுவார்கள். ஆண் பிள்ளைகள் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்ளமாட்டார்கள். 

வாசிப்புநேரம் -
ஆண் பிள்ளைகளிடத்தில் வாசிப்புப் பழக்கம் குறைவாக இருப்பதற்குக் காரணம்?

படம்; பிரசன்னா கிருஷ்ணன்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பெண் பிள்ளைகள் கணிதம் செய்ய சிரமப்படுவார்கள். ஆண் பிள்ளைகள் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்ளமாட்டார்கள்.

ஆண் பிள்ளைகளிடத்தில் வாசிப்பு பழக்கம் குறைவாக இருப்பதற்கு, இப்படிப்பட்ட எதிர்மறையான கருத்துகள் பரவலாக இருப்பதே காரணம் என்கிறது ஜெர்மானிய ஆய்வு.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மட்டுமல்லாது சக நண்பர்களும் கூறும் இக்கருத்து ஆண் பிள்ளைகளின் மனதில் ஆழமாக பதிவது அதற்குக் காரணம் என்றது ஆய்வு.

வாசிப்பதில் அவர்களுக்கு இருக்கும் திறனை அவர்களே குறைத்து மதிப்பிட அது வகை செய்கிறது என்று ஆய்வு குறிப்பிட்டது.

CNN இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்த ஆய்வறிக்கையின் விவரங்கள் இடம்பெற்றன.

Child Development எனும் சஞ்சிகையில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஜெர்மனியில் பயிலும் ஐந்தாம், ஆறாம் வகுப்பைச் சேர்ந்த 1,500 மாணவர்களிடையே
ஆய்வு நடத்தப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்