Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடற்பயிற்சி செய்யாமலிருக்கக் கூறப்படும் சாக்குப்போக்குகள்

உடலைக் கட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை அறிந்தும் பலர் அதனைச் செய்யாமல் சாக்குப்போக்குகளைக் கூறுவதுண்டு.

வாசிப்புநேரம் -
உடற்பயிற்சி செய்யாமலிருக்கக் கூறப்படும் சாக்குப்போக்குகள்

படம்: Pixabay

உடலைக் கட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை அறிந்தும் பலர் அதனைச் செய்யாமல் சாக்குப்போக்குகளைக் கூறுவதுண்டு.

இந்தச் சாக்குப்போக்குகள் யாவை? அவற்றைக் கூறாமல் உடற்பயிற்சி செய்ய என்ன வழி?

சாக்குப்போக்கு 1: "உடற்பயிற்சி செய்ய நேரமில்லை."

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று கூறுவது ஒரு நொண்டிச்சாக்கு. இதனை எளிதில் எதிர்கொள்ளலாம்.

முழுமையாக ஒரு மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்து அதனால் பயன்பெற முடிவதில்லை என்றால் குறுகிய காலத்திற்கு உடற்பயிற்சிகளை அடிக்கடி செய்யலாம்.

பத்து நிமிடங்களுக்கு மெதுநடை, மாடிப்படிகளை ஏறுதல் போன்ற சுலபமான பயிற்சிகளை வாரத்திற்குப் பல முறை செய்யலாம்.

சாக்குப்போக்கு 2: "உடற்பயிற்சிக்குப் பயிற்றுவிப்பாளரை அமர்த்துவதும் உடற்பயிற்சிக் கூடத்தின் உறுப்பினராகக் சேர்வதும் விலைமிக்கது."

YouTubeஇல் உடற்பயிற்சிக் காணொளிகளை இலவசமாகப் பார்த்து அவற்றில் பரிந்துரைக்கப்படும் பயிற்சிகளைச் செய்யலாம்.

இல்லையென்றால், நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து பணத்தைத் திரட்டி உடற்பயிற்சிக்கான பயிற்றுவிப்பாளரை அமர்த்தலாம்.

சாக்குப்போக்கு 3: "உடற்பயிற்சி செய்தாலும் உடல்எடை குறையவில்லை."

உடல் எடையைக் குறைப்பதற்காகவே உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

அதற்கு மாறாக ரத்த அழுத்தம், நீழிரிவு நோய் போன்றவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவது, ஆழ்ந்த உறக்கம் ஆகிய நற்பலன்களை உடற்பயிற்சி அளிக்கலாம் என்பதை மனத்தில் நிறுத்தி பயிற்சி செய்வது முக்கியம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்