Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மறுபயனீடு செய்து மறுவாழ்வு கொடுப்போம்!

நம்மில் பலருடைய வீடுகளில் தூக்கிப்போடக்கூடிய பல பொருட்கள் இருக்கும். அது போன்ற பொருட்களை மறுபயனீடு செய்து அவற்றுக்கு மறுவாழ்வு கொடுப்போம்!

வாசிப்புநேரம் -
மறுபயனீடு செய்து மறுவாழ்வு கொடுப்போம்!

படம்: Pixabay

நம்மில் பலருடைய வீடுகளில் தூக்கிப்போடக்கூடிய பல பொருட்கள் இருக்கும். அது போன்ற பொருட்களை மறுபயனீடு செய்து அவற்றுக்கு மறுவாழ்வு கொடுப்போம்!

பிளாஸ்டிக் போத்தல்

பிளாஸ்டிக் போத்தல்களை வாங்கி தூக்கிப்போடுவதற்குப் பதிலாக அவற்றின் மேல்பகுதியை வெட்டி திறந்த பொட்டலங்களை மூடுவதற்கு அவற்றைப் பயன்படுத்தலாம். பொட்டலத்தின் திறந்த பகுதியைப் பிளாஸ்டிக் போத்தலின் மூடியினுள் திணித்து மூடினால் காற்று புகாது.

சிறிய அட்டைப் பெட்டிகள்

சில நேரங்களில் கடைகளில் பொருட்கள் சிறிய அட்டைப் பெட்டிகளில் அடைத்து விற்கப்படும். அப்பெட்டிகளை அழகான காகிதங்களால் அலங்கரித்து அவற்றில் வீட்டிலுள்ள வேறு பொருட்களை வைத்து ஒழுங்குபடுத்தலாம்.

பழைய ஆடைகள்

நீங்கள் தற்போது அணியாத ஆடைகள் உள்ளனவா? அவற்றை நன்கொடையாகக் கொடுங்கள் அல்லது வீட்டைச் சுத்தம் செய்யும் கந்தல் துணியாகப் பயன்படுத்துங்கள்.

செய்தித்தாட்கள்

வீட்டிலுள்ள பழைய செய்தித்தாட்களின் வண்ணமயமான பக்கங்களைப் பயன்படுத்தி பரிசுப் பொருட்களைப் புத்தாக்கமான விதத்தில் அலங்கரியுங்கள்.

தேநீர்க் கோப்பைகள்

உடைந்த அல்லது பயன்படுத்தாத தேநீர்க் கோப்பைகளில் சிறிய தாவரங்களை வைத்து அவற்றை அலங்காரப் பொருட்களாக வீட்டில் வையுங்கள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்