Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலக மக்களை அச்சுறுத்தும் உடற்பருமன்

உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர் இன்னும் 27 ஆண்டுகளுக்குள் உடற்பருமன் பிரச்சினையால் அவதியுறக் கூடுமென ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
உலக மக்களை அச்சுறுத்தும் உடற்பருமன்

படம்: Pixabay

உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர் இன்னும் 27 ஆண்டுகளுக்குள் உடற்பருமன் பிரச்சினையால் அவதியுறக் கூடுமென ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போதுள்ள இதே போக்கு நீடித்தால், 2045ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையில் 22 விழுக்காட்டினர் உடற்பருமானால் அவதிப்படுவர்.

அந்த விகிதம் சென்ற ஆண்டை விட 14 விழுக்காடு அதிகம். இரண்டாம் வகை நீரிழிவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

தற்போது 11 இல் ஒருவருக்கு அந்தப் பாதிப்பு உள்ளது. வருங்காலத்தின் அது எட்டில் ஒருவராக உயரக்கூடும்.

உடற்பருமன் தொடர்பில் வியன்னாவில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் அது குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

உடற்பருமனாக இருப்போர், அல்லது இரண்டாம் வகை நீரிழிவுக்கு ஆளானோர் அல்லது இரண்டு பாதிப்பும் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவிருப்பதே உலகம் எதிர்கொள்ளவிருக்கும் முக்கியமான சவால் என்று ஆய்வாளர்கள் கவலை கொள்கின்றனர்.

அப்படியொரு நிலை வந்தால், உலகின் பல நாடுகளின் சுகாதாரச் செலவு கடுமையாக உயரக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்