Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஓடுவதால் முழங்கால் பாதிக்கப்படுகிறதா?

அதிகம் ஓடுவதால், முழங்கால் பாதிக்கப்படுகிறது என்பது ஒரு பரவலான எண்ணம்.

வாசிப்புநேரம் -

அதிகம் ஓடுவதால், முழங்கால் பாதிக்கப்படுகிறது என்பது ஒரு பரவலான எண்ணம்.

நடப்பதைவிட ஓடுவது தான் முழங்கால்களை அதிகம் பாதிப்பதாக ஓர் ஆய்வும் தெரிவித்துள்ளது.

ஆனால், ஓடுவது முழங்கால்களுக்கு முற்றிலும் கெடுதி அல்ல.

ஓடுவதால், cartilage என்ற குருத்தெலும்பு வலுவடைவதாக ஆய்வாளர்கள் கூறினர்.

அதனால், முழங்கால் மூட்டுவீக்கம் வருவதைத் தவிர்க்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு குறிப்பிட்டது.

குருத்தெலும்பில் இரத்த விநியோகம் இல்லாததால், தன்னைத் தானே சீர் செய்யும் ஆற்றல் அதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

அதனால், அடிக்கடி ஓடும்போது, அது பாதிப்படைந்து முழங்கால் மூட்டுவீக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொதுவான கருத்து.

ஆனால் சிலருக்கு அவ்வாறு ஏற்படலாம். அனைவருக்கும் அல்ல.

ஓடுபவர்களைவிட ஓடாதவர்களுக்குத் தான் மூட்டுவீக்கம் அதிகம் ஏற்படுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஓடினாலோ, நடந்தாலோ, முழங்கால்களுக்கு ஏற்படும் பாதிப்பு நாளடைவில் ஒன்று தான் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக New York Times நாளிதழ் சொன்னது.

மேலும், ஓடுவதால் குருத்தெலும்புக்கு ஏற்படும் சிறிய பாதிப்புகளை அதுவே சீர் செய்துகொள்ள வாய்ப்புகள் உண்டு என்றும் ஆய்வு கூறியது.

அதன் மூலம், குருத்தெலும்பு பலமாகிறது.

எனினும், ஆய்வு முடிவுகள் கோட்பாடு சார்ந்தவை மட்டுமே என New York Times தெரிவித்தது.

குருத்தெலும்பு எப்படிச் சீராகிறது என்பதற்கு விளக்கங்கள் இல்லை.

அதற்கு மேலும் சோதனைகள் செய்ய வேண்டும் என்று ஆய்வாளர் ஒருவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்