Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குங்குமப்பூ- எங்கிருந்து வருகிறது?

பொழுது புலரும் முன்னர், குங்குமப்பூ பறிப்போர் சிட்டாய்ப் பறந்து தங்களின் பணியைச் செய்யத் தொடங்குகின்றனர். 

வாசிப்புநேரம் -
குங்குமப்பூ- எங்கிருந்து வருகிறது?

படங்கள்: AFP/HOSHANG HASHIMI

ஆப்கானிஸ்தான்: பொழுது புலரும் முன்னர், குங்குமப்பூ பறிப்போர் சிட்டாய்ப் பறந்து தங்களின் பணியைச் செய்யத் தொடங்குகின்றனர்.

அவர்கள் கண்ணைப் பறிக்கும் நிறங்களில் உள்ள குங்குமப்பூக்களைப் பறித்துப் பொருள் ஈட்டுகின்றனர்.

உலகமெங்கும் பல்லாண்டு காலமாகக் குங்குமப்பூ சமையலில் பயன்படுத்தப்படுகின்றது. அதன் விலையும் சற்று அதிகம்.

அறுவடை செய்பவர்கள் குங்குமப்பூ 'சிவப்புத் தங்கமாகக்' கருதப்படுகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் 156,000 தொழிலாளர்கள் குங்குமப்பூவை அறுவடை செய்கின்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு வெள்ளி சம்பளம். நாள்தோறும் நான்கு முதல் ஐந்து கிலோகிராம் குங்குமப்பூவைப் பறிக்கின்றனர்.

அறுவடை செய்யப்படும் குங்குமப்பூக்கள், ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு பூவிலிருந்து சிவப்பு நிறத்தில் இருக்கும் மெல்லிய தண்டுகள் எடுக்கப்படுகின்றன. ஒரு பூவில் மூன்று தண்டுகள் இருக்கும்.

அவை உலரவைக்கப்பட்டுப் பின் பொட்டலங்களில் அடைக்கப்படுகின்றன.

உலகில் குங்குமப்பூவை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஈரான்.

ஆண்டுதோறும் 400டன் அளவிலான குங்குமப்பூவை ஈரான் உற்பத்தி செய்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்