Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உணவுகளில் மறைக்கப்பட்ட உப்பு, கவனம் தேவை- எச்சரிக்கும் உணவு நிபுணர்கள்

உணவில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சுவை சேர்ப்பது மட்டுமல்ல, அது ஓரளவு ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. 

வாசிப்புநேரம் -

- துர்கா கிருஷ்ணமூர்த்தி

உணவில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சுவை சேர்ப்பது மட்டுமல்ல, அது ஓரளவு ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது.

உப்பில் இருக்கும் சோடியம் (sodium) நம் உடலில் உள்ள திரவ அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்தம், நரம்பு, தசைகளின் செயல்பாடு ஆகியவற்றையும் அது கட்டுப்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல், சில உப்புகளில் கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுச்சத்துகளும் சிறிய அளவில் உள்ளன.

உப்புகள் பலவகை. சமையல் உப்பு (table salt), இமாலய இளஞ்சிவப்பு உப்பு (Himalayan pink salt), கடல் உப்பு (sea salt), கோஷர் உப்பு (kosher salt), செல்டிக் உப்பு (Celtic salt) இப்படிப் பல.

அவற்றுள் எது சிறந்தது? நமது சாப்பாட்டில் எவ்வளவு உப்பைச் சேர்த்துக் கொள்ளலாம்?

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின், உணவுப் புத்தாக்க, வளங்கள் நிலையத்தின் உணவியல் வல்லுநர் கேரொலின் ஸ்டீஃபன்ஸ்-இடம் 'செய்தி' கேட்டறிந்தது.

எந்த உப்பு வகை சிறந்தது?

எந்த உப்பு வகை சிறந்தது என்பது தனி நபர் விருப்பத்தைப் பொறுத்தது.

உப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, அதை எதற்குப் பயன்படுத்துகிறோம், அதன் விலை என்ன போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வெண்டும்.

ஊட்டசத்தைப் பொறுத்தவரை...

சோடியம் (sodium) அளவு:

  • அனைத்து உப்பு வகைகளுக்கும் கிட்டதட்ட ஒரே அளவுதான்.
  • செல்டிக் உப்பில் சற்று குறைவாக இருக்கும்.

பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்களின் அளவு:

  • இமயமலை இளஞ்சிவப்பு உப்பு, செல்டிக் உப்பில் மற்ற உப்பு வகைகளை விட சற்று அதிகமாக உள்ளன. அதனால் அவற்றின் நிறமும் வேறுபடுகிறது.
  • இருப்பினும், தினசரி உணவில் இருக்கும் தாதுச்சத்துகளை விட அது மிகவும் குறைவு.

சுவை

  • சாதாரண சமையல் உப்பை (table salt) விட, கல்லுப்பு சற்று சுவையாக இருக்கும்.

உப்பைச் சமையலைத் தாண்டி வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

  • உணவு கெட்டுப்போகாமல் பாதுகாக்க (preservative)
  • காய்கறிகளில் உள்ள கிருமிகளை நீக்க.
  • கோஷர் உப்பை மாமிசத்தில் உள்ள ரத்தத்தை அகற்ற

எவ்வளவு உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்?

  • ஒரு நாளைக்கு 2000 மில்லிகிராம் சோடியம் அல்லது ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் (HPB), 2018-ஆம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து ஆய்வின்படி,சிங்கப்பூரர்களில் 10இல் 9 பேர் சராசரி அளவைவிட அதிகமான உப்பை உட்கொள்கின்றனர்.

நாளொன்றுக்கு, சிங்கப்பூரர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட இருமடங்கு (9 கிராம்) உப்பு உட்கொள்வதாக ஆய்வு கூறுகிறது.

தேவைக்கு அதிகமான உப்பு உட்கொண்டால்..

அளவுக்கு அதிகமான உப்பை தினசரி உட்கொண்டால், ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவை ஏற்படலாம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோருக்குக் கண், கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்கள் (chronic disease) உள்ளவர்களுக்கு பாதிப்பு மோசமடையலாம்.

உணவுகளில் மறைக்கப்பட்ட உப்பு (Hidden salt)

  • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், உடனுக்குடன் தயாரிக்கப்படும் உணவுகளில் நிறைய உப்பு இருக்கும்.
  • உப்பு சேர்க்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், கலனில் அடைக்கப்பட்ட உணவுகள் (processed tin food cans) போன்றவற்றை அளவோடு சாப்பிட வேண்டும்.
  • Monosodium glutamate (MSG) எனும் Ajinomoto உப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.
  • sauce எனும் குழம்புவகை, salad dressing எனும் காய்கறிக் கலவையில் சேர்க்கும் குழம்பு போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதால், சோடியம் குறைந்த வகைகளைத் தெரிவு செய்யலாம்.
  • Iodine குறைபாடு உள்ளவர்கள் Iodized உப்பைப் உபயோகிக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்