Images
  • Samsung

4 கேமராக்களைக் கொண்ட Samsung கைபேசி நவம்பர் மாதம் வெளிவரவுள்ளது

Samsung நிறுவனம் 4 கேமராக்களைக் கொண்ட அதன் புதிய கைபேசியை அடுத்த மாதம் சந்தையில் விற்கவுள்ளது.

அந்தக் கைபேசியின் பெயர் Samsung Galaxy A9.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலாலம்பூரில் நடந்த Samsung நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சியில் கைபேசி பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.

கைபேசியில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. கேமராக்கள் கைபேசியின் பின்பகுதியில் இடம்பெற்றிருக்கும்.

முதல் கேமரா 24 megapixel லும் , இரண்டாவது 8 megapixel லும் கொண்டுள்ளன.

Galaxy A9 கருப்பு, நீலம், இளஞ்சிவப்பு நிறங்களில் வெளிவரும்.

கைபேசிச் சந்தையில் தற்போது சீனக் கைபேசி நிறுவனங்கள் கடுமையான போட்டி கொடுத்து வருவதால் முன்னணி நிறுவனங்கள் புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளன.

Top