Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் திரையரங்கு

சவுதி அரேபியாவின் முதல் புதிய திரையரங்கு 35 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் 18ஆம் தேதி தலைநகர் ரியாத்தில் திறக்கப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -
35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் திரையரங்கு

படம்: Pixabay

சவுதி அரேபியாவின் முதல் புதிய திரையரங்கு 35 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் 18ஆம் தேதி தலைநகர் ரியாத்தில் திறக்கப்படவுள்ளது.

AMC Entertainment Holdings நிறுவனத்துடன் சவுதி அரேபியா செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் அது சாத்தியமானது.

அடுத்த 5 ஆண்டுகளில் 40 திரையரங்குகளைத் திறக்க திட்டம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. திரையரங்குகளில் பாலினம் ரீதியாகப் பொதுமக்கள் பிரிக்கப்பட மாட்டார்கள்.

சவுதி அரேபியாவில் பொது இடங்களில் பாலினப் பாகுபாடு உள்ளபோதும் திரையரங்குகள் விதிவிலக்காகத் திகழவிருக்கின்றன.

சவுதி அரேபியாவில் 1970களில் சில திரையரங்குகள் இருந்தன. திரையரங்குகள் சவுதி அரேபிய கலாசாரத்துக்கு அச்சுறுத்தலாகத் திகழ்வதாய்ப் பலர் தீவிரமாகக் கருதியதைத் தொடர்ந்து, அவை செயல்பாடுகளை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்