Images
  • school
    படம்: Channel NewsAsia 

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாததற்குப் பதற்றம் என்ற மனநோயும் காரணம்

பல நாட்கள் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைகளுக்குப் பதற்றம் என்ற மனநோய் காரணமாக இருக்கலாம் என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.

ஆஸ்துமா, நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகளைக் கொண்ட பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ப்பர்; படிப்பில் பின்தங்கியிருப்பர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளால் மனநோயும் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார் பிரிட்டனின் Exeter மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தலைமை ஆய்வு ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி கேட்டி ஃபின்னிங்.

அவரின் குழு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா போன்ற நாடுகளிலிருந்து 15 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 26 000 இளைஞர்கள் பங்குபெற்ற 8 ஆய்வுகளை மறுபரிசோதனை செய்தது.

பிள்ளைகள் பள்ளிகளுக்குப் போகாததைக் கீழ்ப்படியாமை என்று பெற்றோர் தவறாக நினைக்கலாம் என்கிறார் திருமதி ஃபின்னிங்.

பதற்றம் என்ற மனநிலைப் பாதிப்பு தலைவலி, வயிற்றுவலி போன்ற அறிகுறிகளைக் காண்பிக்கும்; அத்தகைய பிள்ளைகளுக்கு உதவி தேவை
என்றார் அவர்.
 

Top