Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சங்குகளில் அலை ஓசை கேட்பது ஏன்?

சிறு வயதில் கடற்கரை செல்லும்போது கரையோரம் ஒதுங்கி கிடக்கும் சங்குகளைக் காதில் வைத்து கடல் அலைகளின் சத்தத்தைக் கேட்ட ஞாபகம் உண்டா?

வாசிப்புநேரம் -
சங்குகளில் அலை ஓசை கேட்பது ஏன்?

(படம்: Pixabay)

சிறு வயதில் கடற்கரை செல்லும்போது கரையோரம் ஒதுங்கி கிடக்கும் சங்குகளைக் காதில் வைத்து கடல் அலைகளின் சத்தத்தைக் கேட்ட ஞாபகம் உண்டா?

கடலிலிருந்து வந்ததால் சங்கு அந்தச் சத்தத்தை எழுப்புவதில்லை.

நீங்கள் கேட்ட அந்த ஒலிக்கு அறிவியல் ரீதியான விளக்கம் உண்டு.

சங்கிலிருந்து வரும் சத்தம் என்று நாம் நினைப்பது நமது சுற்றுப்புறத்தில் உள்ள சத்தத்தின் எதிரொலி.

சங்கு, போத்தல்கள் போன்று ஒரு புறத்தில் மட்டும் ஓட்டை உள்ள பொருட்களில் இத்தகைய சத்தத்தைக் கேட்கலாம்.

சுற்றுப்புறத்தில் உள்ள ஒலியலைகள் அந்தப் பொருட்களுக்குள் நுழைந்து அவற்றின் உட்புறத்தில் மோதி எதிரொலிக்கின்றன.
அதனால் எழும் சத்தம் கடலின் அலைகளைப் போன்று கேட்கிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்