Images
  • old people

மூத்தோர் கூட்டு இசைக் குழுவில் சேர்ந்து வாழ்க்கையை உல்லாசமாகக் கழிக்கலாம்

கூட்டு இசைக் குழுவில் சேர்ந்து பாடுவது மூத்தோருக்கு உளவியல் ரீதியாகப் பலன்தரும் என்று அண்மைய ஆய்வொன்று கூறுகிறது.

இசைக் குழுக்களில் பங்கேற்கும் மூத்தோரின் சிந்திக்கும் திறன், உடல் ஆரோக்கியம் ஆகியவை மேம்படும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்களின் தனிமையின்மை, வாழ்க்கையில் ஈடுபாடு ஆகியவை மேம்பட்டிருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

சான்பிரான்சிஸ்கோவைச் சுற்றியுள்ள 12 மூத்தோர் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவை வெவ்வேறு இனங்களுக்கும் சமூகங்களுக்கும் சேவையாற்றி வந்தன. ஆய்வில் பங்கேற்ற 208 பேர் கூட்டு இசைக் குழுக்களில் இருந்தனர்.

அவர்களின் சராசரி வயது 71. அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சிறுபான்மை இனத்தையோ சமூகத்தையோ சேர்ந்தவர்கள்.

Innovation in Aging சஞ்சிகையில் வெளியிட்ட கட்டுரையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
 

Top