Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிராங்கூன் ரோடு - சில தகவல்கள்

சிங்கப்பூரில் கட்டப்பட்ட பழமையான சாலைகளில் ஒன்று சிராங்கூன் ரோடு. லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள அது, பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.  அவை என்ன? 

வாசிப்புநேரம் -


சிங்கப்பூரில் கட்டப்பட்ட பழமையான சாலைகளில் ஒன்று சிராங்கூன் ரோடு. லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள அது, பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. 'ரங்கோங்' என்னும் ஒருவகைப் பறவையின் பெயரே பின்னாளில் 'சிராங்கூன்' என்று ஆனதாகக் கருதப்படுகிறது.

சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகள் பார்க்கவிரும்பும் இடங்களின் பட்டியலில் சிராங்கூன் ரோடு நிச்சயம் இடம்பிடித்திருக்கும். பொங்கல், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் சிராங்கூன் ரோடு ஒளியூட்டப்பட்டு ஒளிவெள்ளத்தில் மிதக்கும்.

சிராங்கூன் ரோட்டில் வண்ணமயமான கடைவீடுகள் இருக்கின்றன. கடைவீடுகளின் கலை அம்சங்கள், அவை எந்தக் காலத்தில் கட்டப்பட்டுள்ளன என்பதைப் பறைசாற்றுகின்றன.

'சிராங்கூன் ரோடு' என்னும் 10 பாகங்களைக் கொண்ட தொலைக்காட்சித் தொடர், 2013ஆம் ஆண்டு வெளிவந்தது. 1960களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புலனாய்வுத் தொடராக அது அமைந்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்