Images
  • ss street
    (படம்: AFP/Stand Honda)

49 ஆண்டுக்கு முன்னர் முதன்முதலில் ஒளிபரப்பாகிய 'Sesame Street' தொலைக்காட்சித் தொடர்

8 அடி உயரமான மஞ்சள் நிறப் பறவை. 

அதன் பெயர் 'Big Bird'. அந்தப் பறவையும் அதன் நண்பர்களும் ஒன்றுகூடினால் வேடிக்கை தான்.

அதைப் பார்க்கும் சிறுவர்களுக்கோ கொண்டாட்டம்!

1969இல் இன்று (நவம்பர் 10) 'Sesame Street' முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை 'Sesame Street' நிகழ்ச்சியைப் பார்த்து வளர்ந்த சிறுவர்களின் எண்ணிக்கை ஏராளம்!

'Sesame Street' பற்றிய சில சுவைத் தகவல்கள்:

1. இதுவரை ஒளிபரப்பப்பட்ட பாகங்கள்: 4,480

2. நிகழ்ச்சிக்கு முதன்முதலில் 'Sesame Street' என்ற பெயர் சூட்டப்படவில்லை.

'123 Avenue B' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சியின் எழுத்தாளர்களில் ஒருவர் 'Sesame' என்ற வார்த்தையைப் பெயரில் இணைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.


3. 1969இல் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து கடந்த மாதம் வரை அனைவருக்கும் பரிட்சயமான 'Big Bird' கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்தவர் கெரல் ஸ்பினி (Caroll Spinney) என்பவர்.

அவர் தமது மனைவியைச் சந்தித்தது நிகழ்ச்சியின்

தயாரிப்பின்போது. டெப்ரா ஜீன் கில்ரோய் (Debra Jean Gilroy) என்பவரை 13 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்திருக்கிறார் கெரல் ஸ்பினி! 


4. 'Cookie Monster'ஐத் தவிர 'Sesame Street' நிகழ்ச்சியில் இடம்பெறும் அனைத்து பொம்மை கதாப்பாத்திரங்களுக்கும் 4 விரல்கள் மட்டுமே.

5. 'Oscar the Grouch' எனும் கதாப்பாத்திரம் முதன்முதலில் ஆரஞ்சு நிறத்தில் தோற்றமளித்தது. 

1970இல் இரண்டாவது முறையாகத் தோற்றமளித்தபோதே அந்தக் கதாபாத்திரத்துக்குப் பச்சையும் பழுப்பு நிறமுமான தோற்றம் கொடுக்கப்பட்டது.  

Top