Images
  • shark
    ( படம்: Reuters )

உலகின் ஆகப் பெரிய சுறாமீனைப் பற்றிய திரைப்படம் - எது உண்மை? எது பொய்?

சாதாரண அளவிலான சுறாமீனைக் கண்டாலே பலர் அஞ்சுவர்.

உலகின் ஆகப் பெரிய சுறாமீன் மெகலொடொன் (Megalodon).

அழிந்து போன அந்தச் சுறாமீன் உலகில் இன்னும் இருந்தால்...

அதை மனிதர்கள் சந்தித்திருந்தால்... என்ன நேர்ந்திருக்கும்?

இந்தக் கற்பனையின் திரைவடிவம்தான் 'The Meg' எனும் ஆங்கிலத் திரைப்படம்.

கற்பனைக் கதையில் எது உண்மை? எது பொய்?

திரைப்படம்:

சீனாவின் கடலோரப் பகுதிகளில் மனிதர்களுக்குத் தெரியாத இடத்தில் மெகலொடொன் சுறாமீன் வாழ்ந்து வருகிறது.

உண்மை:

மெகலொடொன் சுறாமீன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புகள் முற்றிலுமாக இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மெகலொடொன் சுறாமீனுக்கு நெருக்கமான இன சுறாமீன் the great white shark.

சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அது கடலில் உருவானபோது, மெகலொடொன் இன சுறாமீன்கள் அழிந்திருக்கும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

திரைப்படம்:

நீர் முழ்கிக் கப்பலைக் கடித்து சின்னபின்னமாக்கும் 25 மீட்டர் சுறாமீன் மெகலொடொன்.

உண்மை:

அழிந்து போன மெகலொடொனின் பற்களைக் கொண்டு தான் ஆய்வாளர்கள் அதைப் பற்றிய தகவல்களைத் திரட்டியுள்ளனர்.

அதன்படி மெகலொடொன் 13இலிருந்து 18 மீட்டர் நீளம் மட்டுமே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மற்ற தகவல்கள்:

உலகின் ஆகப் பெரிய உயிரினங்கள் பெரும்பாலும் தாவரங்களை உட்கொள்பவைதான்.

நிலத்தில் வாழும் பெரிய விலங்குகளுக்கு அதிக அளவிலான உணவு தேவைப்படும்.

அதே போல கடலில் வாழும் பெரிய உயிரினங்கள், அவற்றின் பசியைத் தீர்க்க பல உயிரினங்களை வேட்டையாடிக் கொல்ல வேண்டியிருக்கும்.

இதனால் மெகலொடொன் எத்தகைய உணவை எப்படி வேட்டையாடி உட்கொண்டிருக்கும் என்பது ஆய்வாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் ஒன்று.

உணவு காரணமாக மட்டுமே மெகலொடொன் அழிந்துபோனதா என்பது தெரியவில்லை. ஆனால் அதன் அழிவில் உணவு நிச்சயம் பெரும் பங்கு வகித்திருக்கும்.

2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் நீர்மட்டத்தில் வேகமாக ஏற்பட்ட மாற்றங்களால் கடல்வாழ் உயிரினங்கள் பல அழிந்தன.

அப்பொழுது அழிந்துபோன பெருவாரியான சுறாமீன் இனங்களில் ஒன்று மெகலொடொன்.

அவற்றுக்கு மாறாக சிறிய, துரிதமாக வேட்டையாடக்கூடிய great white சுறாமீன்கள் தோன்றின.
 

Top