Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'கடவுச்சொல்லில் (password) எண்கள் மட்டுமா? கவனம்'-எச்சரிக்கும் நிபுணர்கள்

'கடவுச்சொல்லில் (password) எண்கள் மட்டுமா? கவனம்'-எச்சரிக்கும் நிபுணர்கள்

வாசிப்புநேரம் -
'கடவுச்சொல்லில் (password) எண்கள் மட்டுமா? கவனம்'-எச்சரிக்கும் நிபுணர்கள்

(படம்: Reuters/Kacper Pempel)


எண்களை மட்டுமே கொண்ட கடவுச்சொற்கள் ஆபத்தானவை; அவற்றை எளிதாக ஊடுருவ முடியும் என்று துறைசார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உதாரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கிரிஸ்ஃப்ளையர் (KrisFlyer), குவாண்டாஸ் ஃபிரீகுவண்ட் ஃப்ளையர் (Frequent Flyer) ஆகிய திட்டங்கள், எண்களைக் கடவுச்சொல்லாகக் கொள்ளும்படி கூறுகின்றன.

இணைய ஊடுருவிகள் அத்தகைய கணக்குகளை சில நிமிடங்களில் எளிதாக ஊடுருவ முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

அண்மையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கிரிஸ்ஃப்ளையர் (KrisFlyer) கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தமது கணக்கு ஊடுருவப்பட்டு, 76,000 புள்ளிகள் களவாடப்பட்டதாகப் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புள்ளிகளைக் கொண்டு பயணச்சீட்டு வாங்கமுடியும்.

அதனைத் தொடர்ந்து கிரிஸ்ஃப்ளையர் (KrisFlyer) திட்டத்தின் பாதுகாப்பு குறித்த குறைகூறல் எழுந்தது.

நிறுவனம் தற்போது சம்பவம் குறித்து விசாரித்துவருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்