Images
  • Dalgona
    படம்: Youtube/ddulgi

டல்கோனா காப்பியை (Dalgona coffee) இணையத்தில் அதிகமாக தேடியவர்கள் சிங்கப்பூர்வாசிகள்

உலக அளவில் பிரபலமான டல்கோனா காப்பியை (Dalgona coffee) இணையத்தில் அதிகமாகத் தேடியவர்களுக்கான பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கொரியாவில் பிரபலமான அந்தக் காப்பியை பற்றிய காணொளியை KBS Entertain என்னும் YouTube பக்கம் கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்தது.

பிறகு அந்தக் காணொளி சிங்கப்பூரில் பெரிய அளவில் பேசப்பட்டது, அதைச் செய்த பார்த்த மக்கள் சமூகவலைத் தளங்களில் பகிரவும் தொடங்கினர்.

டல்கோனா காப்பியை (Dalgona coffee) இணையத்தில் அதிகமாகத் தேடியவர்கள் பட்டியலின் முதல் நான்கு இடங்களில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளன.

முதல் இடத்தில் பிலிப்பீன்ஸ் உள்ளது.

மூன்றாம், நான்காம் இடங்களில் புருணையும், இந்தோனேசியாவும் உள்ளன.

மொரீசியஸ் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

கூகள் இணையப்பக்கத்தில் Dalgona coffee-யை தேடியவர்கள் விகிதம் 1,800 விழுக்காடு கூடியுள்ளது.  

Top